ஐக்கிய மக்கள் சக்திக்கு முடியும் என தாம் நம்பவில்லை

பாராளுமன்றத்தில் 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்று சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு முடியும் என தாம் நம்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் மக்கள் தற்போது அனுபவிக்கும் பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் இவ்வாறான அமைச்சரவையில் இருக்கும்.

அனைத்துக் கட்சி அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருப்பார்கள், அவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இவ்வாறான அரசாங்கத்தினால் மேலும் பிரச்சினைகள் எழும் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு போராடி வருகின்றனர்.

24 மணி நேரமும் விவாதங்கள் நடத்தப்பட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே கூட்டணி அமைக்கப்படுகிறது.

சில தரப்பினர் அதிகாரத்தை பெறுவதற்காக குற்றவாளிகள் மற்றும் முரடர்களுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அரசியல் சாசனம் எதுவாக இருந்தாலும், அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை என்றால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

எனவே ஒரு பிரிவினர் நாட்டை வழிநடத்தி, தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்க வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts