பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார்..

இன்று முதல் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தனது முடிவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாக சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

—–

சர்வதேசம் இலங்கை மீது நம்பிக்கை இழந்துள்ள இத்தகைய சூழ்நிலையில், எமது பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய சர்வதேச நாடுகள் எவ்வாறு உதவி செய்ய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டு மக்களும் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைவற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மேற்கொண்ட மோசமான தீர்மானமே.

எனினும், புதிய பிரதமருக்கு அந்த ஜனாதிபதியினதும் நாட்டை இந்தளவு வீழ்ச்சியுறச் செய்தவர்களுக்கும் மத்தியிலேயே செயல்பட வேண்டியுள்ளது.

நாட்டில் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சட்டங்கள் இருந்தன. எனினும் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி அதனை இல்லாதொழித்ததால் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. உதாரணமாக 300 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு தற்போது 620 ரூபாவாகவும் 350 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ரின் மீன் தற்போது 600 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு 1,700 ரூபாவாகவும் 360 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பால் மா ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Related posts