தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தின் மத்தியில் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் மரணம் கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

——-

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளாததால் கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts