வைரலாகும் மாளவிகா மோகனன்..

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.சென்னை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுசிடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பலர் அவருக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். ஒரு ரசிகர் அவருக்கு நடிப்புத் திறமை இல்லை என்ற விமர்சனம் செய்தார். அந்த நபர் தந்து டுவிட்டில் “நடிப்பதில் நீங்கள் அவ்வளவு திறமையானவர் மற்றும் பயங்கரமானவர் அல்ல என்பது எங்களுக்கும் உங்களுக்கும் தெரியும், உங்கள் ரசிகர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் உங்கள் ஹாட் போட்டோஷூட் மற்றும் புகைப்படங்களை பார்த்து வெட்கப்படுகிறார்கள், இதைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாளவிகா மோகன் நீங்கள் டுவிட்டரில் என்னைப் பின்தொடர்கிறீர்கள் அப்போது நீங்கள் கூட எனது போட்டோஷூட்களின் ரசிகன் என்று அர்த்தமா? என கூறினார். ரசிகர்கள் கேள்விகளுக்கு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லைநடிகை ஆகவில்லை என்றால், தனது தந்தை கே.யு.மோகனனைப் போல ஒளிப்பதிவாளராக வந்து இருப்பேன் என்று மாளவிகா மோகனன் கூறினார் மற்றொரு ரசிகர் மாறன் படத்தில் தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார்.மேலும் அவர் நல்லவர் அல்ல என்று நம்பினாலும் அவர் தனது படங்களைப் பார்க்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என வரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts