நாட்டை அழித்த திருடர்கள் ஜே.வி.பியின் தலைவர்

கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (03) அம்பலப்படுத்தினார்.

´நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில் ஊழல் எதிர்ப்புக் குரல் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்திய விசேட கருத்தரங்கில் கலந்துக் கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

‘இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கொன்று இடம்பெற்றது. ஜாலிய வழக்கின் இறுதித் தீர்ப்பு அமெரிக்காவில் இந்த மே மாதம் வரவுள்ளது. இது குறித்த ஒட்டுமொத்த அறிக்கை உள்ளது. அமெரிக்க தூதரகத்தை வாங்க அரசாங்கம் 6.2 மில்லியன் ஒதுக்குகிறது. அதில் 3.3 மில்லியனை அடித்துள்ளனர் . அதாவது 55% அடித்துள்ளனர். அப்படி கொமிஷன் வாங்கியதை அவர் அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜாலிய விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் உறவின சகோதரராவார்.

பெண்டோரா ஆவணங்கள் மூலம் சுமார் 160 மில்லியன் டொலர் திரு நடேசன் மற்றும் நிருபமா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது நமக்கு தெரியும். திரு நடேசனின் பெயரில் பசிலுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தோம்.

2014 கிங் நில்வலா கொடுக்கல் வாங்கலுக்கு சீன நிறுவனமொன்றுக்கு பணத்தை வழங்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சு அவசரம் காட்டியது. குறித்த சீன நிறுவனம் ரூத் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் கணக்கில் அவ்வப்போது 5 மில்லியன் டொலர்களை மாற்றியுள்ளது. அந்த நிறுவனம் திரு நடேசனுக்கு சொந்தமானது. அப்போது நீர்ப்பாசன அமைச்சராக இருந்தவர் நிமல் சிறிபால டி சில்வா. அந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கொள்ளுப்பிட்டியில் உள்ள வங்கிக்கு பணம் அனுப்புகிறது.

பிரான்ஸ் ஏர்பஸ் நிறுவனம் அதிகளவில் ஏர்பஸ்களை வாங்குவதற்கு சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தமை சர்வதேச விசாரணையில் தெரியவந்துள்ளது. நாங்களும் இந்த ஏர்பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்.

சமலின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற எயார் லங்காவின் நிர்வாக சபை கூட்டத்தில் இந்த எயார்பஸ்ஸை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. ஏனென்றால் அவருடைய மகன் அந்த சபையின் உறுப்பினராவார். இதன் மொத்த கொள்முதல் $2.2 பில்லியன் ஆகும்.

இந்த கொள்முதலில், நான்கு விமானங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் $300,000 கப்பம் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது. மொத்தமாக 16.18 மில்லியன் டொலர்கள். இந்த 16 மில்லியன் டொலர்களும் கிடைக்கவில்லை. ஏனெனில் அரசாங்கம் கவிழ்ந்தது. 2 மில்லியன் டொலர்கள் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய எயார் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் கணக்கிற்கு 2 மில்லியன் டொலர்கள் சென்றுள்ளது. குறித்த தொகை அவுஸ்திரேலியாவில் உள்ள கணக்கிற்கு மாற்றப்படுகிறது. அந்த கணக்கில் இருந்து இலங்கையில் உள்ள மூன்று கணக்குகளுக்கு குறிப்பிட்ட தொகை வருகிறது. அதில் ஒன்று நிமல் பெரேராவின் கணக்கு. அமெரிக்காவில் சிஐஏ முகவராக இருந்த சுபேரு கைது செய்யப்பட்டார்.

அவர் எப்படி $12 மில்லியன் சம்பாதித்தார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. தற்போது 12 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது கணக்குகளை பரிசோதிக்கும் போது, ​​மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் அவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. சரியென்றால் கப்ராலும் சிறைக்கு செல்ல வேண்டும். எனவே, இன்று சர்வதேச அரங்கில் எங்காவது ஒரு விடயம் அம்பலமாகுமாக இருந்தால் அதில் இலங்கையை சேர்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பிலும் அம்பலமாகின்றது.

இந்த கருத்தரங்கில் அனுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழு உரை கீழே……

Related posts