வெளியானது ‘பீஸ்ட்’ டிரைலர்..!

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலரின் மூலம் பெரிய வர்த்தக கட்டிடம் ஒன்றில் உள்ளவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது போன்றும் அப்போது அவர்களுடன் அங்கு இருக்கிற இராணுவ வீரரான விஜய் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அவர்களை விடுவிப்பது போன்றும் படத்தின் கதை இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இந்தியாவில் முதல்முறையாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ‘பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்’ என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்பது முழுமையான திரை மற்றும் நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலி அமைப்புடன் ‘ஐமேக்ஸ்’ போன்ற அனுபவத்தை தருவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் நாம் செல்போனில் வீடியோ பார்க்கும் போது, நம்முடைய செல்போன் திரையின் அளவிற்கு ஏற்ப வீடியோவை மாற்றி கொள்வோம். ஆனால் இந்த டெக்னாலஜி மூலம் வீடியோ தானாகவே திரையின் அளவிற்கு மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

Related posts