சமந்தா நடித்த படம், 4 மொழிகளில் தயாராகிறது

சமந்தா நடித்த ‘சகுந்தலம்’ என்ற புதிய படம் 4 மொழிகளில் தயாராகிறது.

சமந்தா நடித்த ‘சகுந்தலம்’ என்ற புதிய படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்தை குணசேகர் எழுதி இயக்கியிருக்கிறார்.

இதில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா புது கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மோகன்பாபு, கவுதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீலிமா குணா தயாரித்து இருக்கிறார்.

Related posts