ராமானுஜர் சிலை சீனாவால் தயாரிக்கப்பட்டது

தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்த 216 அடி உயர ராமானுஜரின் சிலை சீனாவால் தயாரிக்கப்பட்டது என ராகுல் குறிப்பிட்டார். மேலும் புதிய இந்தியா என்பது சீனாவை சார்ந்திருப்பது தானா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகரில் உலகின் மிகப்பெரிய உலோக சிலைகளில் ஒன்றான ராமானுஜரின் சிலையை, பிப்ரவரி 5 அன்று பிரதமர் திறந்து வைத்தார். 45 ஏக்கரில் ரூ.1,000 கோடி திட்ட மதிப்பில் இச்சிலை நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இதற்காக நிதியுதவி அளித்தனர். இச்சிலை சமத்துவத்திற்கான சிலை என்றழைக்கப்படுகிறது.

இந்நிலையில் ராமானுஜர் சிலை குறித்த திட்ட இணையதளத்தில், இச்சிலை சீன நிறுவனத்தால் செய்யப்பட்டது. ரூ.135 கோடி மதிப்பிலான சிலைக்கான ஒப்பந்தம் 2015ல் சீனாவின் ஏரோசன் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘சமத்துவ சிலை சீனாவால் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா என்பது சீனாவை சார்ந்திருப்பது தானா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts