விஜய் சேதுபதியின் ‘96′ படம் 2-ம் பாகம்

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரம் நடித்த சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்கள் வந்தன. கமல்ஹாசனின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படத்தின் இயக்குனர் பிரேம்குமாரை விஜய்சேதுபதி சந்தித்து 96 இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 96 படம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் பலருக்கு பள்ளி காலத்து காதல் நினைவுகளை கிளறி விட்டது.

Related posts