17 பேருக்கு பத்ம பூஷன் விருது

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கப்போவதில்லை” என்று அவர் தெரிவித்தார். புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த விருது வேண்டாம் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்ம பூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்

1. குலாம் நபி ஆசாத்
2. விக்டர் பானர்ஜி
3. குர்மீத் பவா
4. புத்ததேவ் பாட்டச்சார்ஜி
5. நடராஜன் சந்திரசேகரன்
6. கிருஷ்ண எல்லா, சுசித்ரா எல்லா
7. மாதுர் ஜாஃப்ரி
8. தேவேந்திர ஜஜாரியா
9. ரஷீத் கான்
10. ராஜீவ் மெஹ்ரிஷி
11. சத்ய நாராயண நாதெல்லா
12. சுந்தரராஜன் பிச்சை
13. சிரஸ் பூனாவாலா
14. சஞ்சய ராஜாராம்
15. பிரதீபா ரே
16. சுவாமி சச்சிதானந்த்
17. வஷிஷ்ட் திரிபாதி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts