டென்மார்க்கில் எகிறியது கொரோனா 42.018 பேருக்கு தொற்று

டென்மார்க்கில் கடந்த 24 மணி நேரங்களில் அதாவது சற்று முன்னர் 14.00 மணிக்கு வெளியான தகவலின் படி 42.018 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது ஒரே நாளில்.

813 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், பரிசோதனை செய்த 2.28.118 பேரில் 18.42 வீதமானவருக்கு தொற்று இருந்துள்ளது. இது மிகவும் அதிகமான தொகையாகும். நேற்றைய தினத்தைவிட இன்று மேலதிகமாக 13 பேர் வைத்தியசாலை வந்துள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

மூன்றாவது தடுப்பூசி போட்டவர்களில் பலர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள், அத்தோடு முதல் தடவை தொற்று ஏற்பட்டவரில் பலர் மறுபடியும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்கள் பல நகரங்களில் தொற்றுக்குள்ளானதாக வாய் மூலமான தகவல்களை கேட்க முடிகிறது.

புதிய கொரோனா ஒமிகோண் மிக வேகமாக தொற்றுகிறது.

இந்த வைரஸ் கழுத்துவரையே வீரியமாக இருப்பதால் சுவாசப் பையின் ஆழத்திற்கு போகாமல் பெருகுவதால் மரண வேகம் குறைவு என்று முந்தய தகவல்கள் கூறின. ஆனால் இப்போது ஒமிகோண் பீ.ஏ.1 இல் இருந்து பீ.ஏ 2 என்ற பெயரில் பரவுகிறது.

இதனுடைய தாக்கம் எப்படியிருக்குமென தெரியவில்லை, பிரிட்டன், சுவீடன், நோர்வே போன்ற நாடுகளில் வேகம் அதிகம்.

டென்மார்க்கில் ஏற்கெனவே ஒரு தடவை தொற்றுக்கு உள்ளானவர்களில் ஐந்திற்கு ஒருவர் மீண்டும் மறு தொற்றுக்குள்ளாவர் என்றும், சுமார் அரைப்பங்கினரை பிடிக்கும் என்றும் முன்னைய செய்திகள் கூறியிருந்தன.

முக கவசம், சமூக இடைவெளி, கைகளுக்கு ஸ்பிரிட், கொரோனா பரவல் பற்றி எந்த நேரமும் எச்சரிக்கை என்பன அவசியம்.

அலைகள் 23.01.2022 ஞாயிறு

Related posts