பொலிஸ் மா அதிபர் பதவியை பேராயருக்கு வழங்க வேண்டும்

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளை சமூக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஞானசார தேரர் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடத்தப்படும் முறையொன்று உள்ளது. கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை.

கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என கலபொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

Related posts