விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ்

விஜய்யின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு பீஸ்ட் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அஜித்குமாரின் வலிமை படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்து உள்ளதால் இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுமா என்ற கேள்விக்குறிகளும் எழுந்தன. பின்னர் பொங்கலுக்கு பீஸ்ட் வராது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பீஸ்ட் எப்போது வெளியாகும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் விஜய்யின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு பீஸ்ட் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். விஜய் தற்போது பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பள்ளி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

வம்சி பைடி பள்ளி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களையும் டைரக்டு செய்து உள்ளார்.

Related posts