தமிழ் சினிமாவில், அதிகம் பேசப்பட்ட நடிகைகள்

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகி களும் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து பரபரப்பாக பேசப்படு கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் கதாநாயகர்களுக்கு போட்டியாக அதிகம் தேடப்படுகிறார்கள்.

இந்த ஆண்டில் அதிகமாக பேசப்பட்ட கதாநாயகிகள் பட்டியலில், முதல் இடத்தை பிடித்து இருப்பவர், நயன்தாரா. கடந்த சில வருடங்களாக முதல் இடத்திலேயே இருந்து வரும் அவர், இந்த ஆண்டிலும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கிறார்.

இந்த ஆண்டில் அவர் நடித்து 2 படங்கள் (நெற்றிக்கண், அண்ணாத்த) திரைக்கு வந்தன. ‘நெற்றிக்கண்’ படத்தில் அவர் பார்வை இழந்தவராக நடித்து, தன் நடிப்பு திறமையை வெளிப் படுத்தி இருந்தார். ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து, ரஜினி ரசிகர்களால் `அண்ணி’ என்று பாசமாக அழைக்கப்பட்டார்.

நயன்தாராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்தவர், கங்கனா ரணாவத். ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனது திறமையான நடிப்பின் மூலம் ஜெயலலிதாவை அப்படியே பிரதிபலித்தார்.

இவர்களை அடுத்து, ‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேனி கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோள், ‘திட்டம் இரண்டு’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘உடன்பிறப்பு’ படத்தில் தஞ்சை பெண்ணாக நடித்த ஜோதிகா, ‘நடுக்காவேரி’ படத்தில் சராசரி பெண்ணாக வந்த ஆனந்தி, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நந்திதா, அதே படத்தில் வீட்டு வேலைக்கார பெண்ணாக வந்த ரெஜினா கசன்ட்ரா ஆகியோரும் இந்த ஆண்டில், ரசிகர்களால் பேசப்பட்ட கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார்கள்.

Related posts