இலங்கை பாராளுமன்றம் சஸ்பெண்ட்

பாராளுமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து எந்த விளக்கமும் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக பாராளுமன்றம் ஒருவாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. அதன்பிறகு இன்று கூடுவதாக இருந்த நிலையில், திடீரென ஒருவாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீர் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றுள்ளார்.

பாராளுமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து எந்த விளக்கமும் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. பாராளுமன்றம் வரும் 18 ஆம் தேதி மீண்டும் கூடும் எனவும் இலங்கை அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72-வயதான கோத்தபய ராஜபக்சே மருத்துவ காரணங்களுக்காக சிங்கப்பூர் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related posts