நான் இந்து, ஆனால் இந்துத்துவவாதி இல்லை: ராகுல்

மகாத்மா காந்தி இந்து, ஆனால், கோட்சே இந்துத்வவாதியாக இருந்தார் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது.

இந்த மாபெரும் பேரணி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்ட பேரணி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது; இந்திய அரசியலில் தற்போது இந்து மற்றும் இந்துத்துவவாதி என இரண்டு வார்த்தைகளுக்கு இடையேயாதன் பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. நான் ஒரு இந்து, ஆனால், இந்துத்துவவாதி இல்லை. மகாத்மா காந்தி இந்து, ஆனால், கோட்சே இந்துத்துவவாதியாக இருந்தார்” என்றார்

Related posts