வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த திட்டங்கள் எவை?

கேள்வி: கொவிட் தொற்றுநோயினால்ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கம் எவ்வளவுக்கு பாரியதாகஇருக்கிறது?

பதில்: தொற்றுநோய் எங்களை இரு வழிகளில் பாதித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொதுவான வீழ்ச்சி ஒன்றாகும். மற்றொன்று அது வர்த்தகத்தில் ஏற்படுத்திய தாக்கம். இவை இரண்டும் மிகவும் கடுமையானவை. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை வீழ்ச்சி கணிசமானதாகும். ஒவ்வொரு நாளும் எமக்கு இழப்பு ஏற்படுகிறது. அதேநேரத்தில், பல வர்த்தகங்கள் பெரிய வணிகங்கள் கூட முடக்க நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் வர்த்தகம் வழமையானதாக இல்லை என்று அர்த்தம். பொருளாதார நடவடிக்கைகள் கணிசமானஅளவு குறைவடைந்தமை அந்த நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

கேள்வி: குறுகிய கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கானஉங்கள் திட்ட வரைபில் அத்தியாவசியமற்றதாகக் கருதப்படும் பொருட்களின் இறக்குமதிக்கான 100 சதவீத பண வைப்பு எல்லையை நீக்கி விட்டீர்கள். அதை ஏன் செய்தீர்கள்?

பதில்: புதிய உட் பாய்ச்சல்களை [வரவுகளை] ஊக்குவிக்க எங்கள் கொள்கைகள் செயற்படுகின்றன என்பதை காட்ட நாங்கள் விரும்புகிறோம். எங்கள் சொந்தக் கணிப்பீட்டில் நம்பிக்கையைக் காண்பிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். பின்னர், கட்டுப்படுத்துவதற்கான தேவை அங்கு இருக்காது. எமதுஉட்பாய்ச்சல் குறித்து எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் தொழில் செய்பவர்கள் அதை வசதியாக செய்ய முடியும் என்பதை உறுதிபடுத்த விரும்புகிறோம். அவர்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதேசமயம், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு சிறிய ஆலோசனையை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம். அவர்கள் அதைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

கேள்வி: உங்களுக்கு முன்னர் பதவி வகித்தவர் அத்தியாவசியமற்றதாகக் கருதப்படும் இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டாமென ஊக்குவித்ததன் மூலம் டொலர்களை கையிருப்பில் வைத்திருப்பதற்காக இதனை செய்திருந்தார். ஆனால், நீங்கள் அதனை நீக்கி விட்டீர்கள். ஏன்?

பதில்: நாங்கள் அதை வெவ்வேறு வழிகளில் பார்க்கிறோம். ஒன்று, அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதில் எங்களுக்கு சிரமம் உள்ளது என்ற காரணத்தினால் அதைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாங்கள் வித்தியாசமான பார்வையை எடுத்துக் கொள்கிறோம். உட் பாய்ச்சல் ஏற்படும் என்று நாங்கள்எதி ர்பார்க்கிறோம். உட்பாய்ச்சல் வருகிறதென்றால், நாம் முன்பு போல் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நாம் முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மேலும் மேலும் முதலீடுகளை ஈர்க்கும் என்பதுடன், அதிகஉட்பாய்ச்சல்கள் ஏற்படும். பின்னர், எந்த கட்டுப்பாடும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கேள்வி: சாத்தியமான வரவுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையுடன் பேசுகிறீர்கள். தற்போதுள்ள முதலீடுகள் மற்றும் வரவுகள் என்ன?

பதில்: அதனை நான் முன்பே செய்திருக்கிறேன். கடந்த காலத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நான் இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். பல்வேறு பின்னடைவான நிலை, குறிப்பாக பொருளாதார பின்னடைவான நிலை, சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் யுத்தம் என்பனவற்றின் போது நாங்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்என்பதை எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த அனுபவங்களை நாங்கள் இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில், சில சிரமங்கள் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அனைத்து கட்டுமானத் தொகுதிகளையும் அமைத்தவுடன், இந்த சவால்களை நியாயமான முறையில் சமாளிக்கும் நிலையில் நாங்கள் இருப்போம். அது மக்களுக்கு கூடுதலான சுமைகளைத் திணிக்காது.

கேள்வி: அப்போதைய, இப்போதைய சூழ்நிலைகளின் முரண்பாடுகளை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?பதில்: அழுத்தம் இருக்கும். அது பற்றி நிச்சயமாகக் கூற வேண்டும். இருப்பினும், நாம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கலாம். நாம் செல்லும் போது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நான் அதை என் உரையில் குறிப்பிட்டேன். இது 50 ஓவர் போட்டி போன்றது. நாங்கள் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய தருணத்தில் வருகிறோம். அதிக ஓட்டங்கள் இல்லை. நீங்கள் முதலில் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, நீங்கள் இனி எந்த விக்கெட்டையும் இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஸ்திரப்படுத்துகிறீர்கள். பிறகு, நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவீர்கள். பிறகு நீங்கள் இன்னும் சிலவற்றை விளையாடத் தொடங்குவீர்கள். போட்டியின் முடிவில், போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் நன்றாக விளையாடுவீர்கள். நீங்கள் அந்தக் கொள்கையைப் பின்பற்றினால் சிக்கல்களைக் கையாள்வது மிகவும் எளிதானது என்பதைக் நீங்கள் காண்பீர்கள்.

Related posts