திருமண வாழ்க்கை கோபமாக திட்டிய சமந்தா

திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை நடிகை சமந்தா திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கங்களின் பெயரிலிருந்து நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற வார்த்தையை சமந்தா நீக்கிவிட்டார். அப்போதிலிருந்தே நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இருவருமே இது தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பாக 'லவ் ஸ்டோரி' படம் தொடர்பாக நாக சைதன்யா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமந்தா…

வி.சி.குகநாதன் கதையில் நடிக்கும் யோகி பாபு

வி.சி.குகநாதன் எழுதியுள்ள கதையில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் 'தேன் நிலவில் மனைவியை காணோம்'. இந்தப் படத்தின் கதையை பிரபல கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் எழுதியுள்ளார் வி.சி.குகநாதன். இதைக் கேள்விப்பட்ட யோகி பாபு நேரடியாகச் சென்று குகநாதனைச் சந்தித்து கதையைக் கேட்டதும், அதில் உள்ள மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். மேலும், இதில் மலையாளத்தில் பிரபல நாயகியாக வலம் வருபவர் நாயகியாக நடிக்கவுள்ளார். இவருடன் புதுமுகம் அமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, நான் கடவுள் ராஜேந்திரன், சிவசங்கர் ஆகியோருடன், பிரியங்கா, ரிஷா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக கணேசன், இசையமைப்பாளராக…

கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபுதேவா

ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபுதேவா. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்ளிட்டோர் நடித்து 2020-ல் திரைக்கு வந்த ஓ மை கடவுளே படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதில் விஜய்சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஓ மை கடவுளே படம் தெலுங்கு, கன்னடம். இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கன்னட ரீமேக்கை பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் முதல் தடவையாக டைரக்டு செய்து இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் புனித் ராஜ்குமார், கிருஷ்ணா, ரோஷினி பிரகாஷ், சங்கீதா ரீங்கேரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடனமாடும் பாடல் காட்சி தற்போது படமாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு…

பிசாசு 2-ம் பாகம் பேய் படத்தில் விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ல் வெளியான பிசாசு பேய் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் எடுத்து வருகிறார். இதில் பூர்ணா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா பேயாக வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியும் பிசாசு 2-ம் பாகத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து விஜய்சேதுபதி கூறும்போது, “பிசாசு-2 கதையை மிஷ்கின் சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் உருவாக்கி இருந்ததை சொல்லும்போது பெருமையாக இருந்தது. அவர் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். பிசாசு-2 படத்தில் எனக்காக பிரத்யேகமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளார்” என்றார். பிசாசு-2 படத்தின் முதல் தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் ஆண்ட்ரியா குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு கையில் சிகரெட்டுடன் தலைகீழாக தொங்கியபடி இருந்தார். இந்த போஸ்டர்…

கொரோனா சடலத்தை வீடு கொண்டு சென்றதால் பரபரப்பு!

கிளிநொச்சியில் கொரோனாத் தொற்றினால் உயிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர் கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த கிராமத்தில் அவருடைய இறுதி நிகழ்வுகள் அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்கனவே தனிமைப்படுத்துள்ள குறித்த மரணம் நிகழ்ந்த வீட்டில், கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை மக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கின்றபோது அங்கு செல்கின்ற மக்கள் ஊடாக மீண்டும் கொரோனாப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இருந்தபோதிலும்…

இலங்கையில் கொரோனாவால் 103 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டெம்பர் 18 உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,125 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி செப்டெம்பர் 13 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட 01 ஆணும் 01 பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் 13 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 44 ஆண்களும் 33 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 77 பேர் செப்டெம்பர் 18 உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் உள்ளிட்ட குழு நாடு திரும்பியது

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்தனர். கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, இத்தாலிக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​​போலோக்னாவில் இடம்பெற்ற G-20 சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டார். ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான செப்டெம்பர் 12ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கமைய, குறித்த மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் சிங்கப்பூரில் இருந்து UL 309 எனும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம், இலங்கையை வந்தடைந்தனர். G20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30-31 ஆகிய இரு தினங்கள் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதோடு, இதில் இந்தியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட…