கதாநாயகன் ஆனது ஏன்? சூரி விளக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி விடுதலை படத்தில் கதாநாயகனாகி இருக்கிறார். இந்த படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார்.
இதுகுறித்து சூரி அளித்துள்ள பேட்டியில், “இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன். அது நடந்தது. கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்தும் காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன். கதாநாயகனாக களம் இறங்கும்போது நம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படிப்பட்ட கதைக்காக காத்திருந்தேன். ஆனால் அது வெற்றி மாறன் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. உடனே அட்வான்சை கொடுத்தார். படம் சிறப்பாக தயாராகி வருகிறது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடிக்கிறேன். கொரோனா பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. சொந்த பந்தமும் அவசியம் என்பதை உணர்த்திவிட்டது’’ என்றார்.

Related posts