விபத்தில் சிக்கிய நடிகையும், பாதிக்கப்பட்ட பட அதிபர்களும்..

மூக்குத்தி அம்மன், மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜோம்பி ஆகிய படங்களில் நடித்தவர், யாஷிகா ஆனந்த். இவர் தனது தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பும்போது, மாமல்லபுரம் அருகில் விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய தோழி வள்ளி செட்டி பவானி அந்த இடத்திலேயே பலியானார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.மேலும் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு சில மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்குப்பின் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும். அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம்…

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குவிந்த முன்னணி நடிகர்கள்

கொரோனா ஊரடங்கு தளர்வில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக நடிகர்கள் ஏற்கனவே தலைமுடியை நீளமாக வளர்த்து தயாராகி உள்ளனர். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடியும் வரை வேறு படங்களில் அவர்களால் நடிக்க இயலாத நிலை உள்ளது. இதனால் படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும், ஒரே நேரத்திலேயே படமாக்கி வருகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடத்தினர். ஊரடங்கு தளர்வில் புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கொரோனா 2-வது அலையால் நிறுத்தி வைத்த படப்பிடிப்பு இப்போது மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. அனைத்து நடிகர்- நடிகைகளையும் வைத்து ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படப்பிடிப்பில் பங்கேற்க விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,…

பிரசித்திபெற்ற முருகன், அம்மன் கோவில்களில்பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

ஆடி மாத திருவிழாக்களையொட்டி பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற முருகன், அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்வதால் தொற்று…

‘பூமிகா’ ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

பூமிகா' திரைப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது அதிலிருந்து மாறி சில படங்கள் நேரடியாகத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளது 'பூமிகா'. ஆகஸ்ட் 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் 'பூமிகா' ஒளிபரப்பாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய ஒளிபரப்பு முடிந்தவுடன், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். ஹாரர் - த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘விக்ரம்’ அப்டேட்: இந்தி உரிமம் விற்பனையில் சாதனை

கமல் நடித்துவரும் 'விக்ரம்' படத்தின் இந்தி டப்பிங் உரிமம் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. சில தினங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை முன்வைத்து இப்போதே உரிமைகள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக 'விக்ரம்' படத்தின் இந்தி டப்பிங் உரிமையைப் பெரும் விலைகொடுத்து கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுமார் 37 கோடி…

பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்

இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அணுகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரத்தை கடந்த வாரத்திலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது. இந்த விவகாரத்தில் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்…

சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கின்றனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தனக்கு சொற்ப இலாபங்கள் கிடைக்கின்றது என்பதற்காக பொறுத்தமில்லாத ஒரு நபருக்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை தாரை வார்த்துக் கொடுப்பது கல்குடா சமூகத்திற்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்கின்ற மோசடியான விடயம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.ஹாருன் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சபை உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (01) ஓட்டமாவடியில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் இரண்டு பாரிய கட்சிகளுடன்…