காணாமல் போன கதாநாயகியும்… துப்பறியும் கதாநாயகனும்…

மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் தேர்ந்தவர், அருள்நிதி. தற்போது, ‘தேஜாவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மாறுபட்ட திகில் படம். மதுபாலா, ஸ்முருதி வெங்கட், மைம்கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கே.விஜய் பாண்டி, பி.ஜி.முத்தையா ஆகிய இருவரும் தயாரிக்க, புதுமுக டைரக்டர் அரவிந்த் சீனிவாசன் இயக்கி வருகிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:- ‘‘ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறாள். அவளை கண்டு பிடிக்க கதாநாயகன் துப்பறிவதும், அதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதை. இதில் அருள்நிதி, மதுபாலா ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரி களாகவும், ஸ்முருதி வெங்கட் காணாமல் போகும் பெண்ணாகவும் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படம் முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்து வருகிறது.’’

பேய் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்குகள்

சுந்தர் சி. டைரக்‌ஷனில், ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ ஆகிய 2 படங்கள், ஏற்கனவே திரைக்கு வந்தன. இரண்டுமே நகைச்சுவை கலந்த பேய் படங்கள். இதையடுத்து, ‘அரண்மனை 3’ படத்தை சுந்தர் சி. உருவாக்கி இருக்கிறார். படத்தைப் பற்றி அவர் வெளியிட்ட தகவல்கள்:- ‘‘இதுவும் நகைச்சுவை கலந்த பேய் படம்தான். முதல் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், அந்தப் படங்களை விட, 2 மடங்கு அதிக செலவில், ‘அரண்மனை 3’ படம் உருவாகி இருக்கிறது. மிக பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறோம். ஆர்யா, ராஷிகன்னா ஆகிய இருவருடன் நானும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். விவேக், வின்சென்ட் அசோகன், யோகி பாபு, வேல ராமமூர்த்தி, மதுசூதன்ராவ், விச்சு, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படத்தின் உச்சக்கட்ட காட்சிக்காக ஒரு கோடியே 50…

உண்மை சம்பவ கதையில் வக்கீல் வேடத்தில் சூர்யா

சூர்யா நடித்து வெளிவந்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தனது 39-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை புது டைரக்டர் ஞானவேல் டைரக்டு செய்திருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனமே இப்படத்தை தயாரித் திருக்கிறது. இதில் சூர்யா, வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார். படம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வளர்ந்திருக்கிறது. படத்துக்கு, ‘ஜெய் பீம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதுவும் ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம்தான். சமூக நீதிக்காக போராடும் ஒரு வக்கீலை பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களுக்காக போராடும் வக்கீலாக சூர்யா நடித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா தனது 40-வது படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்துக்கு, ‘எதற்கும் துணிந்தவன்’ என்று…

அஜித்தின் வலிமை ரிலீஸ் எப்போது?

அஜித்குமார் நடிக்கும் வலிமை படம் ரிலீசாகும் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். இந்த படத்துக்கு வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. அதை படமாக்க அடுத்த வாரம் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு சென்னை திரும்பி ரிலீஸ் தேதியை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர். அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்ணாத்த, வலிமை ஆகிய 2 படங்களையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும்படி தியேட்டர் அதிபர்கள் தரப்பிலும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் வருடம் பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன.…

473 கடல் வாழ் உயிரினங்கள் இதுவரை பலி!

தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய MV X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், இதுவரை 417 கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைகள்ளம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட மாஅதிபர் திணைக்களம் இதனை தெரிவித்திருந்தது. அதற்கமைய, 417 கடலாமைகள், 48 டொல்பின்கள், 8 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கப்பலின் தீ காரணமாக வெளிவந்த நச்சு இரசாயனங்கள் மற்றும் எரிபொருள் கடல் நீரில் கலந்துள்ளதாக, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மன்றிற்கு தெரிவித்தார். கடந்த மே 20ஆம் திகதி திடீரென…

விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்

கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கோணிப்பைகளில் கட்டி சக்லேஷ்பூர் - பேகூர் சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. 14 குரங்குகளையும் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். எஞ்சிய 46 குரங்குகள் உயிரிழந்தன. இதுகுறித்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சமூக ஊடகங்களில் இதுகுறித்த படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, 'விலங்குகள் மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது' என, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 2019ம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய…