இது என்ன மாதிரியான மனநிலை?

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி இடையூறு செய்ததை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, இது என்ன மாதிரியான மனநிலை என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பிறகு புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை அவையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ‘‘நாடாளுமன்றத்தில் புத்துணர்ச்சி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பெண்கள், தலித், பழங்குடியிடி சமூகத்தினர் அதிகஅளவில் அமைச்சர்களாகியுள்ளனர். விவசாயம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தற்போது அமைச்சர்களாகியுள்ளனர்’’ எனக் கூறினார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ‘‘பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இந்த நாட்டின் சாதாரண மக்கள் இன்று அமைச்சர்களாகியுள்ளனர். ஆனால் இது சிலருக்கு…

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் கோட்டாபய ?

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ----- நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 285,912 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 261,848 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 3,779 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ----- நேற்றைய தினம் (18) நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக…

மலையக 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன். சிறுவர்களை பணிக்கமர்த்தும் முகவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி…

தடுப்பூசி போட்ட சினேகா, பிரசன்னா

நடிகர், நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஆர்யா, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், சிம்ரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பொதுமக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தினர். இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா ஆகியோரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பிரசன்னா தற்போது விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடிக்கிறார்.

வயதான தோற்றத்தில் சென்று விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி

விஜய் நடிக்கும் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் சென்னை பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். வயதானவராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வயதான தோற்ற மேக்கப் போட்டுக்கொண்டு கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்தார். அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சில நிமிடங்கள் தனியாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டே இருந்தார். பின்னர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்தார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொல்லி வியந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். இருவரும் நலம் விசாரித்தனர். கார்த்தியிடம் விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்'' என்று பாராட்டினார்.…

சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.25 கோடி

சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். டாக்டர், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ளார். தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். டாக்டர், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அடுத்து டான் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற படத்தை இயக்கி பிரபலமான அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு பட உலகிலும் மார்க்கெட் உள்ளதால் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இதில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல்…

நடிகர் விஜய் வழக்கு: வரி மேல்முறையீடு

நடிகர் விஜய் வழக்கினை, வரி மேல்முறையீடு அமர்வுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய் 2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி எம்.எம்.சுரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை…

மூளை புற்றுநோய்க்கான செறிவூட்டிய கதிர்வீச்சு சிறப்பு சிகிச்சைமுறை

மூளை புற்றுநோய்க்கான செறிவூட்டிய கதிர்வீச்சு சிறப்பு சிகிச்சைமுறை புற்றுநோய்க்கு பல வகையான சிகிச்சை முறைகள் இருந்தாலும், குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதை நோயாளிகளும், மருத்துவர்களும் அறிவர். சிகிச்சை எப்போதும் இரு கட்டங்களை உள்ளடக்கியது; பாதிப்பை ஏற்படுத்திய புற்றுநோய் செல்களை அகற்றுவது, அது மீண்டும் வராமல் தடுப்பது என்பது தான். மூளையை செயலிழக்கச் செய்யும் புற்றுநோய் தான் மிகவும் சிக்கலான ஒன்றாகும். மேலும், மூளை புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், அதற்கான நவீனகால சிகிச்சைமுறை குறித்தும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் கதிர் வீச்சியல் புற்றுநோய் சிகிச்சை முதுநிலை மருத்துவர் ஜெ. சுரேந்திரன் விவரிக்கிறார். கேள்வி: யாருக்கு மூளை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்? பதில்: மூளை புற்றுநோய் என்பது குழந்தைகள், வாலிபர்கள், வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் வரலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சில வகை புற்றுநோய் குணப்படுத்தக்…