மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசின்

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் அசினை நடிக்க வைக்க முயன்றதாக 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். அதிலும், இந்தப் படத்துக்குப் பிறகு இப்போது வரை பலரும் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்றே அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்போது ரசிகர் ஒருவர், "உங்கள் கடந்த படங்களில் தமிழின் தாக்கத்தை கவனித்திருக்கிறேன். உதாரணம் மலர் டீச்சர்…

எஞ்சாமி பாடல்… 25 கோடி முறை பார்த்து சாதனை

ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் வீடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக்…
தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. கர்ப்பமாக இருந்த சித்தோல் பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. இதுகுறித்து சோட்டெட்சி கூறும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச முடியாது. தயவுசெய்து மீண்டும் பேசலாம் என்று கூறினார். சித்தோல், தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், அவர் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெறவில்லை என்றும் கூறி உள்ளார். சித்தோலின் 10-குழந்தை பிரசவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த…

சூர்யா 40′: அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்

தனது பிறந்த நாளை முன்னிட்டு, 'சூர்யா 40' அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். முன்னணி இயக்குநரான பாண்டிராஜ் நேற்று (ஜூன் 7) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பாண்டிராஜ். மேலும், சூர்யா ரசிகர்களோ 'சூர்யா 40' குறித்த அப்டேட் கொடுக்குமாறு தொடர்ச்சியாக இயக்குநர் பாண்டிராஜிடம் வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, "அன்பான ரசிகர்களே! 35% படம் முடிந்துள்ளது. எடுத்தவரை நன்றாக வந்துள்ளது. ஊரடங்கு முடிந்ததும் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிவிட வேண்டியதுதான். படக்குழுவினர் தயாராகவுள்ளோம். படத்தின் தலைப்பு மாஸாக, முன் அறிவிப்புடன் வரும். ஜூலை வரை நேரம் கொடுங்கள் ப்ளீஸ்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாண்டிராஜ்.…

‘ஜகமே தந்திரம்’ படத்தில் பாடல்கள் நீக்கம் ஏன்?

'ஜகமே தந்திரம்' படத்திலிருந்து 2 பாடல்கள் நீக்கப்பட்டு இருப்பது ஏன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நேற்று (ஜூன் 7) 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இதனை முன்னிட்டு, நேற்று இரவு 8:30 மணியளவில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள். இதில் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அப்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் "புஜ்ஜி…

குறையும் தொற்று; இயல்புக்கு திரும்பும் மதுரை

மதுரையில் கடந்த ஒரு வாரமாக கரோனா புதிய தொற்று பாதிப்பு வேகமாகக் குறையும் நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மொத்த கரோனா பாதிப்பு மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலையில் முதல் உயிரிழப்பு மதுரையில் நிகழ்ந்தது. ஒட்டமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துப்போய் இருந்தநிலையில் மதுரையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. ஆனால், அதன்பிறகு சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு மதுரையில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது ஆண்டு கரோனா பாதிப்பு மதுரை அதிகம் பாதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கும் அளவிற்கு ஒரு கட்டத்தில் சென்னைக்கு இணையாக தொற்று பரவல் அதிகரித்தது. வீட்டிற்கு…