‘சின்னத்திரை’யில் 2 கதாநாயகிகள் இடையே கடும் மோதல்

கதாநாயகர்கள் இடையே போட்டியும், மோதல் மனப்பான்மையும் இருந்தது. அதனால் ஒரு கதாநாயகனுடன் இன்னொரு கதாநாயகன் இணைந்து நடிக்க தயங்கினார்கள். தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டம் வரை கதாநாயகர்கள் இடையே போட்டியும், மோதல் மனப்பான்மையும் இருந்தது. அதனால் ஒரு கதாநாயகனுடன் இன்னொரு கதாநாயகன் இணைந்து நடிக்க தயங்கினார்கள். காலப்போக்கில் போட்டியும், மோதல் மனப்பான்மையும் படிப்படியாக குறைந்து வந்தன. இப்போது மார்க்கெட்டில் உள்ள இளைய தலைமுறை கதாநாயகர்கள் நட்புடன் பழகி வருகிறார்கள். சகோதர மனப்பான்மையுடன் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். இந்த மாற்றம், ‘மல்ட்டி ஸ்டார்’ படங்கள் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் ஆரோக்கியமான காலகட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கு ‘சின்னத்திரை’ நாயகர்கள் சிலர் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், ‘சின்னத்திரை’யில் ‘பூவே உனக்காக’ தொடரில் நடித்து வரும் ஜோவிதா, ராதிகா பிரீத்தி…

நிவாரண நிதி: சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கினார்

நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கி இருக்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய் வழங்கினார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கி இருக்கிறார்.

ஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் நடிகைகள்

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல கதாநாயகிகள், திருமண வாழ்க்கையை வெறுக்கிறார்கள். ஒரு ஆணின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. பிரபல கதாநாயகிகள் மீது மோகம் வளர்த்து ஆசை ஆசையாக அவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெரும் தொழில் அதிபர்கள், அந்த மோகம் தீர்ந்ததும் சலிப்பு அடைந்து விடுகிறார்கள். அவசரப்பட்டு விட்டோமோ என்று தவறு செய்தவர்கள் போல் உணர்கிறார்கள். இதேபோல் அந்த நடிகைகளும் தவறு செய்தவர்கள் போல் வருத்தப்படுகிறார்கள். இந்த உணர்வுகளும், வருத்தங்களும் நாளடைவில் வெறுப்பாக மாறுகின்றன. போகப்போக வெறுப்பு முற்றி தகராறில் முடிகிறது. காதல் கசந்து போய் வேதனையுடனும், விரக்தியுடனும் பிரிந்து விடுகிறார்கள். திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் வருமாறு:- 1. திரிஷா. சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு தொழில் அதிபருடன் காதல் ஏற்பட்டு அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. கருத்து வேறுபாடு…

இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா

சுதந்திரப் போராட்டத்துக்குப்பின் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.. பல இடங்களில், பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவ அரசு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நேற்று நடந்த காணொலி சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா சந்தி்க்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது.…

இந்தியாவில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா 4,077 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் தினமும் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 3.26 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கலந்துகொள்ள நீதிமன்றம் தடை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாதென பொலிசார் நீதிமன்றில் மனு சமர்ப்பித்து பெயர் குறிப்பிடப்பட்ட தடை உத்தரவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி உள்ளிட்ட 05 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிசாரால், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க. ஜனமேஜயந், பிரதேச சபை உறுப்பினர்களான க.விஜயகுமார், ஆ.ஜோன்சன் உள்ளிட்ட 09 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டான் பொலிசாரால், பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன் உள்ளிட்ட மூவருக்கும், மல்லாவி பொலிஸ் பிரிவில் 05 பேருக்கும், ஐயன்குளம் பொலிஸ் பிரிவில் 04 பேருக்கும், மாங்குளம் பொலிஸ் பிரிவில் 06 பேருக்கும் பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இத் தடைஉத்தரவில் போரில் உயிரிழந்தவர்களை…

CIDயிடம் அறிக்கை கோருகிறார் சரத் வீரசேகர ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முழுமையற்ற வகையில் காணப்படுவதாக, சட்ட மாஅதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில், உடனடியாக அறிக்கையொன்றை வழங்குமாறு CIDயிடம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார். CID விசாரணை நிறைவு பெறாததால் தமது பதவிக்காலத்துக்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல்செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்ட மாஅதிபர் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். இது தொடர்பில் 130 பக்க அறிக்கையொன்றை சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன, நேற்று (15) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (2019 ஏப்ரல் 21) சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் 5 பேர் மீதான விசாரணைகள் முழுமையடையவில்லை எனவும் அதன் 'A' குழு சந்தேகநபர்கள் 42…