கரோனா நோயாளிகளுக்காக பிரம்மாண்ட அரங்கை வழங்கிய

'ராதே ஷ்யாம்' படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு ஒன்றை கரோனா நோயாளிகளுக்காகப் படக்குழுவினர் வழங்கியுள்ளனர். ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை இத்தாலி நாட்டில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும், சில காட்சிகளை ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். இப்படம் வரும் ஜூலை 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக 70களின் இத்தாலி நகரைப் போல ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. அதில் மருத்துவமனையைப் போல அமைக்கப்பட்டிருந்த ஒரு அரங்கைப் படக்குழுவினர்…

சமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். எப்படி அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்துக் கொண்டே இருக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி. வெளிநாட்டில் மிகவும் பிரபலமான 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியின் இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். 'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகியுள்ளது. விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள்.

விஜய் படத்துக்காக பல கோடி செலவில் போடப்பட்ட அரங்கு

விஜய் இப்போது தனது 65-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடை பெற்றது. அதில் விஜய் 10 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார். படத்தின் முக்கிய காட்சிகளும், விஜய் நடித்த மிக பயங்கரமான ஒரு சண்டை காட்சியும் ஜார்ஜியாவில் படமானது. கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு குழுவினர் அவசரம் அவசரமாக அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர்.இதையடுத்து சென்னை அருகில் உள்ள பூந்தமல்லியில், பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமான ஒரு அரங்கு அமைக்கப்பட்டது. அதில் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது ஒரு குடும்ப காதல் கதை. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் டைரக்டு…

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது, அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. அதற்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றபின், சென்னை திரும்பினார்.சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு அவர் உடல்நிலை தேறியது.‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்தார். 90 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. மீதமுள்ள காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் திரைக்கு வந்த பின், தனுஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அந்த படத்துடன் அவர் திரையுலகில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று பேசப்படுகிறது.

இந்தி, தெலுங்கு படம் இயக்க ஷங்கருக்கு தடை?

இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பாதியில் நிறுத்தி விட்டு இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார். இதனை எதிர்த்து இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் இருதரப்புக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷங்கருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம்…