ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

விரைவில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியமைக்கப் போகிறது என்றவுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வியாபார நிபுணர்கள் எனப் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்கள் மத்தியில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியதாவது; "விரைவில் ஆட்சியமைக்கப் போகும் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுக வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், தலைவர் கலைஞர் கலந்துகொள்ளும் முதல் பாராட்டு விழா திரையுலகினரின் பாராட்டு விழாவாகத்தான்…

நடிகை இலியானா தற்கொலை முயற்சியா?

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு இலியானா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு…

தேர்தல் தோல்வி: நடிகை குஷ்பு கருத்து

காங்கிரஸ் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இது குஷ்புவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி என்பது தோல்வியோடுதான் தொடங்குகிறது. மக்கள் தீர்ப்பை அடக்கத்தோடு ஏற்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை மேலும் சிறப்பானதாக மாற்ற புதிய அரசுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருப்போம். அறிவாலயம் மீதும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமையில் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்று நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும். நல்ல பணிகள் தொடர…

மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்…

நாக்கை அறுத்துக்கொண்ட திமுக பெண் தொண்டர்: மு.க.ஸ்டாலின் வருத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா(வயது 32). தி.மு.க. தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டிக் கொண்டார். இந்தசூழலில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதுடன், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க இருப்பதால், வனிதா தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று காலை முத்தாலம்மன் கோவிலுக்கு வந்தார். ஆனால் கோவில் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தனது காணிக்கையை செலுத்த வேண்டும் என்பதற்காக வனிதா திடீரென கத்தியால் நாக்கை அறுத்து கோவில் படியில் வைத்துள்ளார். ரத்தம் கொட்டியதால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே வனிதா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வனிதாவை தூக்கினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

இந்தியாவின் நிலையே இங்கும் ஏற்படலாம்

நாட்டு மக்கள் சுகாதார சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றாது செயற்பட்டால் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இலங்கையிலும் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகும் என இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் வைரஸ் தொற்று நோயாளர்களின் தொகை பெருமளவு அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்காத மக்கள் உதாசீனப் போக்குடன் செயல்பட்டால் தற்போது இந்தியாவில் நிலவும் நிலைமையே இலங்கைக்கும் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டின் தற்போதைய வைரஸ் பரவல் தொடர்பில் விசேட மருத்துவ நிபுணரும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளருமான சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்; நாட்டில் பிரித்தானியாவின் திரிபுபடுத்தப்பட்ட…

உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 17

எம்மைத் தாழ்த்தும் எல்லாச் சூழ்நிலையிலும் உதவும் தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை. லூக்கா 7:7. உலகில் வாழும் மக்கள் யாவரும் யுத்தத்தையும், அதன் விளைவுகளயும் பற்றி அறிக்கைகளையும், கருத்துக்களையும் பேசிவருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் கபடமும் சுயநலம் கருதிய செயலும் என நாம் அறிவோம். ஆனால் அவற்றில் இருந்து விடுபட விரும்பாததால் இலங்கைத் தமிழ் மக்களும், உலகம் தாங்கொண துயரத்தை அனுபவிப்பதை நாம் காண்கிறோம். இவற்றிற்கு மூலகாரணம் பெருமை என்ற ஆணிவேராகும். (இன்றைய இலங்கையின் நிலைவரமும் இதுதான்). இன்றைய தியானத்தை நன்றாக விளங்கிக்கொள்ள லூக்கா 7:1-10 வரை வாசித்துப் பார்க்கவும். ஒருஇராணுவ உயர்அதிகாரின் இராணுவவீரன் கடும்நோயினால் பாதிக்கப் பட்டு மிகவும் வேதனையுடன் காணப்பட்டான். அந்த வேதனையை உயர்…