‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா

தமிழில் விஜய்யின் பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை’’ என்கிறார், அப்புக்குட்டி

கொரோனாவின் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை’’ என்கிறார், அப்புக்குட்டி. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அப்புக்குட்டி. இவர் நடித்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. இந்த விருது தனக்கு நிறைய படவாய்ப்புகளை வாங்கி தரும் என்று எதிர்பார்த்தார். இவருடைய ஆசை நிறைவேறவில்லை. அப்புக்குட்டியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். முதலில் சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புக்குட்டி, இப்போது கோவூரில் வசிக்கிறார். இதுவும் வாடகை வீடுதான். ‘‘சொந்த வீடு வாங்குகிற அளவுக்கு கையில் பணம் இல்லை. கொரோனாவின் முதல் அலை வீசியபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போது தாக்கும் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை’’ என்கிறார், அப்புக்குட்டி.

ஓ.டி.டி.க்கு வரும் பெரிய கதாநாயகர்களின் படங்கள்

தமிழ் சினிமா ஏறக்குறைய கொரோனா நோயாளிகளைப்போல் சுவாசிக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு டி.வி. தொடர்கள், திருட்டு வி.சி.டி., இணையதளத்தில் புது படங்கள் என்று சில பிரச்சினைகளால் சினிமா பாதிக்கப்பட்டு தன் ஜீவித நாட்களை கணிசமாக இழந்து விட்டது. கொரோனாவின் முதல் அலையிலேயே சினிமா மூச்சுத்திணறி, அதிர்ஷ்டவசமாக ‘தம்’ பிடித்துக் கொண்டது. தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், விஜய் நடித்த ‘மாஸ்டர், ’ தனுஷ் நடித்த ‘கர்ணன்’ போன்ற படங்களின் வெற்றி, நசிந்து போன சினிமாவுக்கு வைட்டமினாக அமைந்தன. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து தியேட்டர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இந்த சூழ்நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக மறுபடியும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பல பட அதிபர்கள் தியேட்டர்களை மறந்து, ‘ஓ.டி.டி.’யில்…

ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே

தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா அதிக சம்பளம் வாங்குகிறார். இப்போது பூஜா ஹெக்டே சம்பள விஷயத்தில் நயன்தாராவோடு போட்டிக்கு வந்துள்ளார். தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் அறிமுகமாகித்தான் பூஜா ஹெக்டே சினிமாவுக்கு வந்தார். அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது தென்னிந்திய மொழிகளில் பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் வசூல் ஈட்டி உள்ளன. சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்று பேசுகிறார்கள். ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி வாங்கினார். தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் 2 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என்று 6 படங்களில் நடித்து…

திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்; ஏ.ஆர் ரகுமான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் திமுகவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப்பதிவிட்டுள்ளார்.

பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி – தொல். திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் வியூகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கின்றது.. கலைஞருக்கு பின்னால் கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வருகின்ற ஸ்டாலின் அவர்கள், கூட்டணியையும் சிதறவிடாமல் கட்டுக்கோப்பாக வழிநடத்தி, மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார். 6வது முறையாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் ஏறுகிறது. ராஜதந்திரத்தில் வல்லவர், ஆளுமை மிக்கவர் என்பதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே தனது லட்சியம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனா. மேலும்…