3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை

மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர இனி மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்பட வேண்டும் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார். இந்தக் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வரும் கங்கணா செவ்வாய்க்கிழமை அன்று தற்போதைய கரோனா சூழலைச் சுட்டிக்காட்டி, இந்த உலகை நாம் மோசமாக வைத்திருக்கிறோம். அதன் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிட்டோம் என்கிற ரீதியில் கங்கணா அடுத்தடுத்து ட்வீட்டுகள் பகிர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அதிக மக்கள்தொகையால் நாம் அவதிப்படுகிறோம் என்று பதிவிட ஆரம்பித்தார் கங்கணா. "அதிக மக்கள்தொகை காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 130 கோடி என்பது நமது அதிகாரபூர்வ மக்கள்தொகை. இதோடு சட்டவிரோதமாகக் குடியேறிய 25 கோடி மக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு மூன்றாம் உலக நாடு. ஆனால், நல்ல தலைமையின்…

நானி திரைப்படத்துக்காக 6.5 கோடி ரூபாய் அரங்கம்

தெலுங்கு நடிகர் நானி நடித்துவரும் 'ஷ்யாம் சிங்கா ராய்' திரைப்படத்துக்காக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ராகுல் சங்க்ரீதியான் இயக்கத்தில் நானி நாயகனாக நடிக்கும் படம் 'ஷ்யாம் சிங்கா ராய்'. கொல்கத்தாவில் நடக்கும் வரலாற்றுக் கற்பனைக் கதையான இது மறு ஜென்மம் என்கிற கருவை வைத்து எழுதப்பட்டுள்ளது. சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி ஆகியோருடன் ராகுல் ரவீந்திரன், ஜுஷூ சென்குப்தா, முரளி சர்மா, அபினவ் கோமதம் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ள இந்தக் கதைக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக வேறொரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. அப்போது முதலில் ஏ.ஆர்.ரஹ்மானும், பின்னர் அனிருத்தும் இசையமைப்பார்கள் என்று கூறப்பட்டது. தயாரிப்பாளர் மாறியதும் படத்தின் பட்ஜெட் மாறுதலால் இசையமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர்…

ஆட்டோ ஓட்டிய பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரதியுக்‌ஷா என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து ஏழை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, மருத்துவம் சம்பந்தமான உதவிகளை வழங்கி சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறும்போது, “எனக்கு சிறுவயதில் இருந்தே சமூக சேவையில் ஆர்வம் உண்டு. தற்போது பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறேன். இந்த நிலைக்கு என்னை உயர்த்திய சமூகத்துக்கு பிரதிபலனாக உதவத்தான் தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்'' என்றார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சமந்தா பங்கேற்றபோது ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனரும் கலந்து கொண்டார். அந்த பெண் பேசும்போது, “எனது பெற்றோர் மறைவுக்கு பிறகு எனது 7 சகோதரிகளை ஆட்டோ ஓட்டி காப்பாற்றி வருகிறேன்” என்றார். அதை கேட்ட சமந்தா கலங்கினார். உடனடியாக ரூ.12.5…

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு மகனுடன் நடிக்கும் விக்ரம்

தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனுடன் பிரபு, சிவகுமாருடன் சூர்யா, சத்யராஜுடன் சிபிராஜ், விஜயகுமாருடன் அருண் விஜய் என்று தந்தை மகன் இணைந்து நடித்த படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். துருவ் விக்ரம் ஏற்கனவே தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயனாக அறிமுகமானார். விக்ரமும் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இது விக்ரமுக்கு 60-வது படம். இதில் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். வாணி போஜன் இன்னொரு நாயகியாக வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விக்ரம், துருவ் விக்ரம்…

ஆக்சிஜன் டேங்கர் கசிவு: உயிரிழப்பு 22 ஆக உயர்வு

மராட்டியத்தில் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கர் கசிவால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வுந்துள்ளது. மராட்டிய மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே கூறுகையில், “22 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை நோயாளிகள் ஆக்ஸிஜனை முறையாகப் பெறுகின்றனர் என்றும், 170 நோயாளிகள் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்தார். மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் கூறுகையில், ஆக்ஸிஜன் வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருவதாகவும் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணை முடிந்ததும் நாங்கள் முழு…