தடுப்பூசியையும் மாரடைப்பையும் இணைத்துப் பேசாதீர்கள்

விவேக் மாரடைப்புக்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பைச் சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள்…

மன்னிப்பு கேட்ட -2 வது கணவர்

2 வது கணவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து கொடுத்த புகாரை சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா வாபஸ் வாங்கிக்கொண்டார். பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா(வயது 39). இவர், நடிகர் முரளி நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது நடிகை ராதா, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், லோகையா தெருவில் வசித்து வருகிறார். நடிகை ராதாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா (44) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவை, நடிகை ராதா 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி…

எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது- டைரக்டர் ஷங்கர்

அந்நியன் திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது என டைரக்டர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். டைரக்டர் ஷங்கர் தனது இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்த ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாகவும் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் அனுப்பி உள்ள நோட்டீசில், ‘அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறவில்லை. அந்நியன் படத்துக்காக சுஜாதா எழுதிய கதையை பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன்.…

2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து விட்டது. ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக் காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,18,302 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து…

நடிகர் விவேக்கிற்கு ‘எக்மோ’ சிகிச்சை

நடிகர் விவேக்கிற்கு'எக்மோ'சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விசாரித்து உள்ளார் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்கள் குழு நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியதாவது:- நடிகர் விவேக், தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார்.நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார் என…

அரசியல் பழிவாங்கல்: பரிந்துரைகளை அமுலாக்கும் யோசனை

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் அரச தலைவர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கான திகதிகள் இன்னமும் உறுதியாகாத போதிலும் அவர் புதுவருடத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விஜயத்தின் போது சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ------- அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. 2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…

STF அதிகாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயம்

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தில் பயணித்ததன் காரணமாக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (16) காலை வடமராட்சி முள்ளிப்பகுதியில் மணல் கடத்தலினை முறியடிப்பதற்காக யாக்கரை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமை சேர்ந்த அதிரடிப்படையினர் பதுங்கி இருந்துள்ளனர். இதன்போது கெப்…