கர்ணன் படம் கொண்டாடப்பட வேண்டியது – உதயநிதி

கர்ணன் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுத்துள்ள படம் எனவும், இது கொண்டாடப்பட வேண்டிய படம் எனவும், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.

1995-ம் ஆண்டு நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி என பதிவிட்டுள்ளார்.

Related posts