வடக்கில் மக்களை அவதானமாக இருக்க ஆளுநர்

வடமாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவு குறைந்து தற்போது மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நீடித்து மக்கள் வழமை நிலைமைக்கு திரும்ப வேண்டுமானால் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமென வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எம்.எஸ். சார்ள்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக இது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் மிக மிக அவதானமாக நடந்து தங்களையும் சமூகத்தையும் முழு நாட்டையும் உபாதைகளுக்குள் தள்ளி விடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் ஆளுநர் திருமதி.பி.எம்.எஸ். சார்ள்ஸ் வேண்டுகோள் கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்கிருந்தோ வந்த கொரோனா வைரஸ் திடீரென யாழ்.குடாநாட்டை தாக்கியபோது அதற்காக இரவு பகல் பாராது சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வைத்தியர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சகல தரப்பினருக்கும் ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதே வேகத்தில் கட்டுப்படுத்தல் பணிகள் தொடர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக புத்தாண்டில் மக்கள் நமது கொண்டாட்டங்களை வீடுகளில் இருந்தவாறு உறவுகளுடன் கொண்டாட வேண்டும். இது ஒரு சோதனை காலம் என்பதால் எதிர்கால வாழ்வு சுபிட்சம் பெற நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts