இலங்கை வர வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இனிமேல் நாட்டிற்குள் நுழைய வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை என, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இச்செயற்பாடு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுலாக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, கடந்த வருடம் (2020) வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் உட்பட ஏராளமான இலங்கை வர முடியாமல் சிக்கியிருந்தனர். அதன் பின்னர் அவ்வாறு சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது. அதன் அடிப்படையில், தங்களது சொந்த செலவில் நாடு திரும்ப தயாராக உள்ளவர்கள், வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியுடன் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு குறித்த அனுமதி அவசியமில்லையென, இராணுவத் தளபதி…

அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். "கடந்த நல்லாட்சியில் தேசிய வீடமைப்பு அமைச்சராக தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டார். அதன் போது, நகர, கிராம மக்களுக்கு பல வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தோட்ட மக்களுக்கான வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. நாம் தொடர்ச்சியாக நகர, கிராம வீடமைப்புக்கு ஒத்ததாக தேசிய வீடமைப்பு அமைச்சின் ஊடாகவும், தோட்ட பகுதிகளில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தோம். அதன் படி, 2018/19 ஆம் ஆண்டுகளில் தோட்ட பகுதிகளிலும் உதாகம்மான வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. 2019 ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது, அவை அவற்றின்…

விஷால் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

கொரோனா திரைத்துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வருகின்றன. கொரோனா திரைத்துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படத்தையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த படம் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தற்போது தியேட்டர்களில் திரையிட்டால் கூட்டம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஓ.டி.டி. தளத்தை படக்குழுவினர் அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதா, பிரகாஷ்ராஜ், சோனுசூட், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி. இயக்கி உள்ளார். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று,…

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்..?

நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக் கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர். தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி அருகே குழுமினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார். நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது…

சிவகுமார், சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்

சிவகுமார் தனது குடும்பத்தினருடன் தி.நகரில் தனது வாக்கினைச் செலுத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கே முதல் நபராக வந்து வாக்களித்தனர். தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அவருடன் சூர்யா, கார்த்தி, 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் பாண்டியன் ஆகியோரும் சிவகுமாருடன் வந்திருந்தார்கள். சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவருமே வரிசையில் நின்று வாக்களித்தார்கள். அப்போது பலரும் அவர்களைப் புகைப்படம் எடுத்தார்கள்.…

செல்ஃபி எடுத்த ரசிகர்கள்: அஜித் கண்டிப்பு

வாக்களிக்க நின்று கொண்டிருக்கும் போது செல்ஃபி எடுக்கவந்த ரசிகர்களை அஜித் கண்டித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கரோனா தொற்று அதிகரித்து வருவதால் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. சென்னையில் திரையுலக பிரபலங்கள் வாக்களிக்க வரும் நேரம் உள்ளிட்டவை பத்திரிகையாளர்களுக்குப் பகிரப்பட்டது. ஆனால், அஜித் வரும் நேரம் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டது. ரசிகர்கள் குழுமிவிடுவார்கள் என்பதே காரணம் என்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலை 6:30 மணியளவிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க…

பலத்த பாதுகாப்புடன் வாக்களித்தார் ரஜினி

சென்னையில் பலத்த பாதுகாப்புடன் ரஜினி தனது வாக்கினைப் பதிவு செய்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முதலில் கட்சித் தொடக்கம் என அரசியலில் தீவிரம் காட்டிய ரஜினி, பின்பு தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலில் களம் காணவில்லை. அதே சமயத்தில் யாருக்கு ஆதரவு என்பதையும் தெரிவிக்கவில்லை. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களிக்க காலையில் 7 மணிக்கு வந்தார் ரஜினி. அப்போது பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருமே ஒன்று கூடினார்கள். இதனைத் தொடர்ந்து போலீஸ்…