தியேட்டர்களை மூடவேண்டிய அபாயம்

‘தமிழ்நாட்டில், தியேட்டர்களுக்கு போய் படம் பார்ப்பவர்களின் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தியேட்டர்களை மூடவேண்டிய அபாயம் உருவாகி இருக்கிறது’’ என்று திரையரங்க உரிமையாளர்கள் சோகத்துடன் கூறினார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 1,145 தியேட்டர்கள் உள்ளன. இதில், ‘மால்’களில் உள்ள தியேட்டர்களும் அடங்கும். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை தியேட்டர்களுக்குப்போய் படம் பார்ப்பதுதான் எல்லோருடைய பொழுதுபோக்காக இருந்தது. தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கிய பின், தியேட்டர்களுக்கு வரும் பெண்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. பெண்கள் வீட்டிலேயே அமர்ந்து டி.வி. தொடர்களை ரசித்து பார்க்க தொடங்கினார்கள். நாளடைவில் தியேட்டருக்குப்போய் செலவு செய்து படம் பார்ப்பதைவிட, வீட்டிலேயே உட்கார்ந்து படங்களையும், தொடர்களையும் பார்ப்பதை பெண்கள் சவுகரியமாக உணர்ந்தார்கள். இதோடு திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சவால் விட்டு படங்களை வெளியிடுவதால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் மேலும் குறைந்தது. இந்த நிலையில்,…