‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி மும்முரம்

'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி மும்முரமாக உள்ளார். மேலும், கட்சி தொடங்கும் தேதி குறித்தும் விவாதம் நடத்தி வருகிறார். டிசம்பர் 31-ம் தேதி, கட்சி தொடங்கவுள்ள நாள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார் ரஜினி. அன்றைய தினத்தில் எங்கு முதல் பொதுக்கூட்டம், எப்போது கட்சி தொடக்கம் உள்ளிட்டவை குறித்து ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ரஜினியின் அரசியல் வருகை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 'அண்ணாத்த' படத்தில் ரஜினி மும்முரம் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் ரஜினி. கட்சிப் பணிகள் இருப்பதால், முதலில் தனது காட்சிகளை முடித்துவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினி. இதனால் முழுமையாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. காலையில் 7 மணி முதல்…

அமேசான் வெப் சீரிஸ் விஜய் சேதுபதி – மாளவிகா மோகனன்

அமேசான் வெப் சீரிஸில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கவுள்ளனர். மக்கள் மத்தியில் ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. இதனை இன்னும் அதிகப்படுத்த, பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களைப் போட்டி போட்டு ஓடிடி நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. தமிழில் 'பூமி' மற்றும் 'டெடி' ஆகிய படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு உறுதியாகியுள்ளன. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால், ஓடிடி நிறுவனங்கள் முன்னணி நடிகர்களைக் கொண்டு வெப் சீரிஸ்களை உருவாக்கக் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், அமேசான் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் 'தி பேமிலி மேன்'. இதனை ராஜ் மற்று டிகே ஆகியோர் இயக்கியிருந்தனர். தற்போது 'தி பேமிலி மேன் 2' தயாரிப்பில் உள்ளது. இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டமான வெப் சீரிஸ்…

ஹாலிவுட் அதிரடி படத்தில் நீது சந்திரா

இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தபு, மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோனே, சப்னா ஆஸ்மி ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். மறைந்த பிரபல நடிகர் இர்பான்கானும் ஹாலிவுட் படத்தில் வந்தார். தற்போது தனுஷ் தி க்ரே என்ற ஹாலிவுட் படத்தில் கிரிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகை நீது சந்திராவும் நெவர் பேக் டவுன் படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் நெவர் பேக் டவுன்:ரிவால்ட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகிறது. நீது சந்திரா கராத்தே கற்றவர் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். கெல்லி மார்டிசன் இயக்குகிறார். மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன், ஒலிவியா பாபிகா ஆகியோரும் நடிக்கின்றனர். நீது சந்திரா, தமிழில் மாதவன் ஜோடியாக…

கோல்டன் குளோப் விருது விழாவில் சூரரைப் போற்று

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உயரிய விருதாக கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் விருது பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 78-வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த போட்டிக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் திரையிட உலக அளவில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன. தேர்வான படங்கள் பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த…

ரஷ்யாவிலிருந்து முதற்கட்ட உல்லாச பிரயாணிகள் 200பேர்

விமான நிலையங்கள் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் முதலாவது உல்லாச பிரயாணிகள் எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டுக்கு வருகை தர உள்ளனர். ரஷ்யாவிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தடவையாக 200 உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்தார். ரஷ்ய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களூடாக நாட்டுக்கு வர உள்ளனர். இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பிரயாணிகள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் உல்லாசப் பிரயாணத் துறை பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தரும் போது அங்கு அவர்களுக்கு பிசிஆர்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு

2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான அறிவித்தலை வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 16 ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 3 வாக்குகளினால் பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டது. அந்த இடத்துக்கு மீண்டும் முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்யும் வகையில் 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ், மாகாண…