கணவரிடம் 9 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை

டி.வி. நடிகை சித்ரா விவகாரத்தில் கணவர் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார். டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 8 மணி நேரம் விசாரணை…

விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு ‘யு ஏ’ சான்று

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. தற்போது தியேட்டர்களை திறந்தும் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓ.டி.டி. தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் ஓ.டி.டி. முடிவை கைவிட்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தணிக்கை குழுவினர் தற்போது பார்த்து ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அதிகமான சண்டை காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யூ ஏ சான்றிதழ்…

ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ்

அவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகிர்' படத்திலும் அவர் நடித்துள்ளார், மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த படமான 'தி கிரே மேன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் மீட்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த 11ந்தேதி பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் இந்த பள்ளிக்கூடத்தில் புகுந்து சூறையாடினர். இதனால் அதிர்ச்சியில் மாணவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டனர். இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்த மாணவர்கள்…

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமான காலம்

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள். அதன் காரணமாக முப்படையினர் மற்றும் பொலிசார் சுகாதாரப் பகுதியினரால் வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாதாகவுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் கூட ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார் அத்தோடு அரசாங்க அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம்.எனினும் எதிர்வரும் இரண்டு…

பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்ல!

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு என அமைச்சர் தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்ல இருக்கிறார்கள். பிரச்சினைகளை தீர்ப்பது அதிகாரிகளின் வேலை. அரசியல்வாதிகளின் பொறுப்பு என்னவென்றால் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குதலாகும். பாரம்பரிய அரசியல் நடைமுறைகளின் படி இது கடினமாகும் என அமைச்சர் தெரிவித்தார். ------ கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட…