செல்வராகவன் – தனுஷ் கூட்டணி: முதற்கட்டப் பணிகள்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தைத் தயாரித்து வருகிறார் தாணு. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். 'கர்ணன்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தாணு தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். அதில் 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படமும் ஒன்று. 'அத்ரங்கி ரே', கார்த்திக் நரேன் இயக்கும் படம், ராம்குமார் இயக்கும் படம், மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் என பல்வேறு படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். இதனால் செல்வராகவன் படம் எப்போது தொடங்கும்…

ரஜினியின் புதிய கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு …!

ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த்…

டி.வி. நடிகை சித்ரா வழக்கில் கணவர் கைது ஏன் …?

டி.வி. நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார். பிரபல டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண் டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.…

இந்தியாவில் ஒரு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 5 மாதங்களில் மிக குறைந்த ஒரு நாள் பாதிப்பு இதுவாகும். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் (ஜூலை 7 முதல்) மிகக் குறைந்த ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பு 99,06,165 ஆக அதிகரித்துள்ளது. 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,709 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,477 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 94,22,636 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.3,39,820 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும்…

கொரோனா தொற்றாளர் சுகாதார திணைக்களமே அறிவிக்கும்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதனால் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ்.மருதனார்மட சந்தை பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 32 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் ஊடாக யாழின் ஏனைய பகுதிகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுவதனால் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கல்வி நடவடிக்கைகளை பொறுத்த வரைக்கும் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை தற்போது மூடியுள்ளோம். அது தொடர்பில் சுகாதார பிரிவினரும், கல்வி பிரிவினரும் கலந்துரையாடி ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பரிசீலனை செய்வார்கள். யாழ்.மக்கள் மிக அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடக்குமாறு கோருகின்றோம்.…