2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட நடிகர் விஜயின் டுவீட்

2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட நடிகர் விஜயின் டுவீட் தற்போது டிரெண்டாகி உள்ளது

“பிளாக் பாந்தர்” நட்சத்திரம் சாட்விக் போஸ்மேன் மரணம் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் “தில் பெச்சாரா” ஆகியவை 2020 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் டிரெண்டானவை என டுவிட்டர் தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்டது நடிகர் விஜயின் டுவீட் .

கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய், வேனுக்கு மேல் ஏறி தன்னைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 1ம் தேதி முதல் 12 தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இடையில் வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் 6ம் தேதி பாஜகவினர் என்.எல்.சி சுரங்க நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுத்தது யார் உடனே அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து நெய்வேலி 2வது சுரங்கம் முன்பு ரசிகர்கள் அதிக அளவு குவிந்தனர். 2 நாட்கள் காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். இந்நிலையில், மீண்டும் 5000க்கும் மேற்பட்டோர் சுரங்கம் முன்பு குவிந்தனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வெளியே வந்த விஜய், வேன் மீது ஏறி தனது ரசிகர்களைக் கண்டு கையசைத்து, பின்னர் ரசிகர் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த புகைப்படம் இணையம் மட்டும் அல்லாது, விஜய் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தது. டிரெண்டிகில் முதல் இடம் பிடித்து அன்றைய தினமே சாதனை படைத்த நிலையில், தற்போது இந்த புகைப்படம் குறித்து டுவிட்டர் இந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட டுவீட் என பதிவிட்டுள்ளது . இது தற்போது டிரெண்டாகி வருகின்றது.

அமிதாப்பச்சன் அவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த ஆண்டு ஜூலை மாதம் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். பின்ன குண்மாகி வீடு திரும்பினர் அமிதாப்பச்சனின் அந்த டுவிட் ஆண்டின் மிகவும் பிடித்த மற்றும் மேற்கோள் செய்யபட்ட செய்யப்பட்ட டுவிட்களாகும்.

அது போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட ராஜ்புத் நடித்த “தில் பெச்சாரா”, இந்தி திரைப்படம் குறித்து அதிகம் டுவீட் செய்யப்பட்டது,

பட்டியலில், தீபிகா படுகோனின்”சாப்பாக்”, அஜய் தேவ்கன் நடித்த காலம் “தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்”, டாப்ஸி பன்னுவின் “தப்பாட்” மற்றும் நெட்ஃபிக்ஸ் திரைப்படம் “குஞ்சன் சக்சேனா” ஆகியவை இடம்பெற்றுள்ளன

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பட்டியலில் அதிகம் பேசப்பட்டதில், ரியாலிட்டி தொடரான “பிக் பாஸ்” முதலிடத்தையும், “நாகின் 4” மற்றும் “யே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை” ஆகிய இடங்களையும் பிடித்தன.
—-
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டபோது சென்னையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. பின்னர் விஜய்யை வீட்டுக்கு அழைத்து வந்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் விஜய் மீண்டும் நெய்வேலிக்கு திரும்பி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவரை காண ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்து கையசைத்த விஜய் அங்கிருந்த பஸ்சில் ஏறி நின்று ரசிகர்கள் கூட்டத்தோடு செல்பி எடுத்துக்கொண்டார். அது வலைத்தளத்தில் வைரலானது. அந்த செல்பியை டுவிட்டர் நிறுவனம் இந்த ஆண்டில் அதிகம் மறுபகிர்வு செய்யப்பட்ட செல்பியாக தேர்வு செய்துள்ளது. இந்த செல்பி 1 லட்சத்து 45 ஆயிரம் தடவை ரீடுவீட் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. டுவிட்டரில் விஜய் செல்பி சாதனை நிகழ்த்தியதை ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகிறார்கள்.

Related posts