திரை விமர்சனம் – டெனெட்

உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டையுடன் படம் தொடங்குகிறது. அப்போது ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ என்ற அழைக்கப்படும் நாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவனிடம் விநோதமான முறையில் ரிவர்ஸில் சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது ‘டெனெட்’ என்ற ரகசிய இயக்கம். காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் புல்லட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதாகவும், மேலும் கடந்த காலத்தையே அழிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஒன்றும் இருப்பதாகவும் நாயகனிடம் விஞ்ஞானி ஒருவர் சொல்கிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக மும்பை வருகிறார் நாயகன். அங்கே அவருக்கு அறிமுகமாகும் நீல் என்பவரின் உதவியுடன் ஆயுத வியாபாரியான பிரியாவை (டிம்பிள் கபாடியா) சந்திக்கிறார். அவரும் ஒரு டெனெட் உறுப்பினர் என்பதை தெரிந்து கொள்கிறார். ப்ரியாவின் மூலம்…

3 மொழிகளில் வரலட்சுமி படம்

வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வில்லி வேடங்களையும் ஏற்கிறார். தற்போது அவர் கைவசம் 10 படங்கள் உள்ளன. இதில் சேசிங் படம் முடிந்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக வருகிறார். கே.வீரக்குமார் இயக்கி உள்ளார். தஷி இசையமைத்துள்ளார். போலீசை பெருமைப்படுத்தும் பாடல் படத்தில் உள்ளது. வரலட்சுமியின் அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன. அவற்றில் டூப் போடாமல் நடித்து இருக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள் உள்ளனர். மலேசியாவில் கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு தீவில் பதுங்கி இருக்கும் முக்கிய வில்லனை பிடிக்க வரலட்சுமி, பாலசரவணன், யமுனா ஆகியோர் மலாக்காவில் கடலில் ஒரு படகில் துரத்தி செல்வதுபோன்று காட்சியை படமாக்கினர். படகு நடுகடலில் சென்றபோது முன்னால் உட்கார்ந்து இருந்தவர்கள் பின்னால் வந்ததால் திடீரென்று…

அரசியல் பிரவேசம்: அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்

தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன், ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முழுமையாக முடிப்பார்.சிறுத்தை சிவா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 60 சதவீதம் முடிந்து உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று நேற்று பெங்களூரு புறப்பட்டு சென்றார். அங்கு தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து வணங்கி புதிதாக கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றார். ரஜினி வருகையை அறிந்த ரசிகர்கள் பெங்களூரு வீட்டின் முன்னால் திரண்டு வாழ்த்து கோஷமிட்டனர். அவர்களை பார்த்து வீட்டின் மாடியில் நின்றபடி ரஜினி கையசைத்தார். வருகிற 12-ந்தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் பெங்களூருலேயே தங்கி இருப்பார் என்று தெரிகிறது. ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை வருகிற 15-ந்தேதி ஐதராபாத்தில்…