கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கங்கனாவை சந்தித்து பேசினார். அப்போது மும்பை நகரத்தில் இருக்கும்போது அவர் பயப்படத் தேவையில்லை" என்று கூறி உள்ளார். இந்த நிலையில் காங்கிரசில் சேர பாஜகவை விட்டு வெளியேறிய உதித் ராஜ் கூறும் போது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் சிறுமியும் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு கோரும் போது அவர்களுக்கு எந்த பாதுகப்பும் வழங்கப்படவில்லை. பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா…

நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்

வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவுத்துள்ளனர். நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது கை, கால்களும் செயல் இழந்தன. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தியதோடு…

வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகர் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். இவர் 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மரணம் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம், தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு…

முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு!

கனடா தமிழ் முதலீட்டாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகைக்கு இன்று (11) அழைத்திருந்தார். வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத் திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த 2 முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துக் கொண்டிருந்தார். இச்சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை…

வேற்றுகிரகவாசிகள் உள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை

வேற்றுகிரகவாசிகள் உள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என ஒருகோடி நட்சத்திரங்களை ஆராய்ந்த ஆஸ்திரேலியா வானியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள வானியலாளர்கள் குழு ஒன்று வேற்றுகிரகவாசிகள் குறித்து தேட அவர்கள் முர்ச்சீசன் வைட்ஃபீல்ட் அரே ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தினர். அவர்கள் வேலா பகுதியை ஸ்கேன் செய்து ஒரு கோடி நட்சத்திரங்களைப் ஆய்வு செய்தனர். ஆனால் வேற்றுகிரகவாசிகள் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என கைவிரித்து உள்ளனர் வேற்றுகிரகவாசிகளின் அறிகுறியே இல்லை என கூறி உள்ளனர். பால் வெளீயில் மட்டும் சுமார் 10000 கோடி முதல் 30000 கோடி நட்சத்திரங்கள் வரை உள்ளன. ஆஸ்திரேலிய வானியலாளர்கள் வெறும் ஒருகோடி நட்சத்திரங்களை மட்டுமே ஆய்வு செய்து உள்ளனர்.எனவே இந்த முரண்பாடுகள் இன்னும் வேற்றுகிரகவாசிகளைத் தேடுபவர்களுக்கு ஆதரவாக உள்ளன. இருப்பினும், விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகள் தேடலுக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ…