அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது

சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கிவந்த அகஸ்தியா திரையரங்கம் நாளையுடன் (செப்.1ம் தேதி) நிரந்தரமாக மூடப்படுகிறது. கடந்த 1967-ம் ஆண்டு திறக்கப்பட்ட அகஸ்தியா திரையரங்கில் முதல் திரைப்படமாக ‘பாமா விஜயம்’ திரையிடப்பட்டது. வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், 1,004 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய திரையரங்காகும். எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘காவல்காரன்’, சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சிவந்த மண்’, ‘சொர்க்கம்’ உள்ளிட்ட படங்கள் இத்திரையரங்கில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழு சுகாதார வசதிகளுடன் இயங்கிய 70 எம்.எம் திரையரங்கான அகஸ்தியா, பெரிய அளவில் வருமானம் இல்லாததால் மூடப்படுகிறது.

சல்மான்கானுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கான், ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்குகிறது. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகள் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5…

நயன்தாராவின் பக்தி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ் நடித்துள்ள லாக்கப் உள்ளிட்ட படங்களை இணைய தளமான ஓ.டி.டி.யில் வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் சூரரை போற்று அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். மீண்டும் அடுத்த மாதம் 30-ந்தேதி வரை தியேட்டர்களை மூடி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மேலும் பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. ஏற்கனவே விஷால் நடித்துள்ள சக்ரா, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், விஜய்சேதுபதியின் ரணசிங்கம், சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா, பிஸ்கோத், கீர்த்தி சுரேசின் குட்லக் சகி, ஐஸ்வர்ய ராஜேஷின் பூமிகா, அரவிந்த சாமி,…

பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம்

மத்திய பிரதேசத்தில் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் தொடங்கி வைப்பதற்கு முன்பே கனமழையில் இடிந்து விழுந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவர் நேற்று முன்தினம் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கும், நேற்று விதிசா பகுதிக்கும் சென்றார். இன்று படகு ஒன்றில் சென்று வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் வெயின்கங்கா ஆற்றின் மீது போக்குவரத்திற்காக ரூ.9 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது முறைப்படி இன்னும் தொடங்கி வைக்கப்படவில்லை. ஆனால், போக்குவரத்திற்கு…

ரி.என்.ஏ வெட்கித் தலைகுனியவேண்டும்..!

என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு (ரி.என்.ஏ) வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்ைகயில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாதான் என்பது அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த விடயம் நன்கு தெரிந்திருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது வெட்கித் தலைகுனிய வேண்டும். பாராளுமன்றத்தில் சமீபத்தில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீது தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான உயர்நீதிமன்ற ஓய்வு…

மலையக மக்கள் அசௌகரியங்களை போக்க விரைவில் நடவடிக்கை

மலையக மக்கள் கடிதங்கள் மற்றும் அவசர தபால் சார்ந்த கடிதங்களை பெற்றுக் கொள்ளவதில் எதிர்நோக்கும் அசௌகரியங்களை போக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரில் நேற்று (30) நடைபெற்ற தபால் திணைக்களத்தின் விசேட நிகழ்வில் சிறப்புரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து இதற்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இன, மத வேறுபாடுகள் இன்றி சுமார் 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதேபோன்று இன்னும் சில தினங்களில் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தயடையாத ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை…