நடிகை பிரியங்கா சோப்ரா சுயசரிதையை புத்தகமாக !

பிரியங்கா சோப்ரா 2000-ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வானார். தொடர்ந்து உலக அழகி பட்டமும் வென்றார். விஜய் நடித்த தமிழன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி முடித்துள்ளார். விரைவில் இதனை புத்தகமாக வெளியிடுகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் எழுதிய சுயசரிதை பணி முடிந்துள்ளது. அதை புத்தகமாக வெளியிட ஆவலாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக சுயசரிதை இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு ஆரம்பித்து 6, 7 மாதங்கள் கடந்து விட்டன. இதன் தாக்கம் உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மைக்கு மாற வேண்டும். நானும்…

இணையதளத்தில் ‘லாக்கப்’ நாளை வெளியாக உள்ளது.

இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன. இந்தநிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் நாளை (14-ந்தேதி) இணையதளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். இதுகுறித்து வைபவ் கூறும்போது, ‘துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப். கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும். நானும் வெங்கட் பிரபுவும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறோம். திரைக்கதை விறுவிறுப்பாக நகரும். தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதோடு ரிலீசுக்கு பல…

இயக்குனர் ராஜமவுலி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலி தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனை தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியானது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, “இரண்டு வார தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். எந்த அறிகுறியும் இல்லை. பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள்…

தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதை

தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது. இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் ரூ.4 கோடி சம்பளம் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம்…