பாலிவுட் நடிகர் சஞ்செய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய்..!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில், சஞ்செய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்செய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சஞ்செய் தத்தின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறுகையில், “ சஞ்செய் தத்திற்கு வந்துள்ள புற்று நோய் குணப்படுத்தக் கூடியதுதான். எனினும், கடுமையான மருத்துவ சிகிச்சை ஆகும். எனவே, அவர் உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என்று…

த.தே.கூட்டமைப்பை கலைக்க வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சியே என சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமான வழியிலேயே உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு கூட இல்லை. தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும். ஏனெனில் தந்தை செல்வா இறந்து பல வருடங்களின் பின்னரே மாவை சேனாதிராசா அந்தக் கட்சியை பொறுப்பேற்றவர். அதற்கு யாரும் அனுமதி கூட வழங்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அனுமதி வழங்கியே மாவை கட்சியின் பொறுப்பை ஏற்றுகொண்டார். இவ்வாறு அனைத்தும் திருட்டுத்தனமாகவே நடைபெற்றது. அதனால்தான் கூட்டமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என கோருகின்றேன். மாவை,சம்பந்தன்,சுமந்திரன் தவிர்ந்த அனைத்து தரப்புக்களும் தமிழர்…

சக வேட்பாளர்கள் எதிர்த்தபோதும் ஸ்ரீதரன் மட்டுமே ஆதரவு தந்தார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியை சி.ஸ்ரீதரனுக்கு வழங்கினால் ஆதரிப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவ் ஊடகத்துக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்சிக்கு எதிராக நான் நடந்துகொள்பவனல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக ஸ்ரீதரன் மட்டுமே இருந்தார். இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேனென…