தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி விஷால்

தமது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது உண்மை தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தன் கைவசம் தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் அவர் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தமக்கும் அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள விஷால், தமது மேலாளருக்கும் இதே நிலை தான் என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்து எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

—-

கரோனா தொற்றிலிருந்து மீண்டது எப்படி என்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது. சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சென்னையைத் தாண்டி இதர மாவட்டங்களில் உள்ள மக்கள் மத்தியிலும் கரோனா பயம் தொற்றிக் கொண்டுள்ளது.
இன்று (ஜூலை 25) மாலை முதல் விஷாலுக்கு, அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. 20 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டு முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகாமல் இருந்தது.
தற்போது கரோனா தொற்று செய்தி தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல் இருந்தது. என் மேலாளருக்கும் அப்படியே.
நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டோம். ஒரே வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியே வந்தோம். தற்போது நாங்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் உள்ளோம்”
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Related posts