சாத்தான்குளம் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர். காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.#JusticeForJeyarajAndFenix மற்றும் #JusticeForJayarajAndFenix ஆகிய ஹேஷ்டேக்குகளில் தங்களுடைய கண்டனத்தை பதிவு…

பாதாள் லோக்’, ‘புல்புல்’ வெற்றி

எங்களின் தயாரிப்புகள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாங்கள் சரியான பாதையில் செல்வதாக உணர்த்துகின்றன என்று நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார். அனுஷ்கா சர்மா, தனது சகோதரர் கர்ணேஷுடன் இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம் க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ். சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக இவர்கள் தயாரித்திருந்த 'பாதாள் லோக்' என்ற வெப் சீரிஸ் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இவர்கள் தயாரித்திருக்கும் 'புல்புல்' என்ற திரைப்படம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தங்களது படைப்புகள் குறித்துப் பேசியுள்ள அனுஷ்கா சர்மா, "எங்களுக்கென்று குறிப்பிட்ட ஒரு வகையில் புதிதாக படங்களை எடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் பெண்களைக் கொண்டாடும் கதைகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். சினிமாவின் மூலம், வலிமையான, சுதந்திரமான பெண்களைக் காட்ட வேண்டும் என்று…

நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். மலையாள படங்களில் இவரது திரை பயணம் தொடங்கி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் தமிழில், கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, மும்மொழியில் தயாராகும் தலைவி என்ற பெயரிலான படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ந்தேதி நடிகை பூர்ணாவின் தாயார் ரவுலா கேரளாவின் மராடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். இந்த புகாரில், தனது மகளை 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டினர் என…

நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி ?

தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர். மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த…