டிஜிட்டலில் வெளியாகும் அடுத்த தமிழ்ப் படம்

தமிழ்த் திரையுலகில் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் 3-வது படமாக அமைந்துள்ளது 'அந்தகாரம்' 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் அட்லி. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு, கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்கப் பணிகளுக்கு இடையே தனது தயாரிப்பில் உருவான அடுத்தப் படத்தை அறிவித்தார் அட்லி. அந்தகாரம்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசி சித்தார்த் இயக்கியுள்ள படத்தின் ஒளிப்பதிவாளராக அமுதன் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 'அந்தகாரம்' படத்தைப் பார்த்தவர்களும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள். இதனிடையே, அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு காத்திருந்தது 'அந்தகாரம்'. அதற்குள் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்…

அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சூர்யா

அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் சூர்யா - கார்த்தி நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது என்று ரீமேக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்துள்ள இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. சரத்குமார் - சசிகுமார், சசிகுமார் - ஆர்யா என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால்…

நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்

நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான…

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும்

இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீசார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் எனும் நபர் போலீசாரின் பிடியில் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து 16 மாகாணங்களிலுள்ள 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் போலீசார்…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை!

தமிழகத்தில் ஜூன் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம். பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில்…