அரசியலுக்கு வரப்போகிறேன் என சினிமாவில் காட்டாதது ஏன்?

அரசியலுக்கு வரப்போகிறேன் என சினிமாவில் காட்டாதது ஏன் என்று கமலிடம் கேள்வி எழுப்பினார் விஜய் சேதுபதி. அதற்கு கமலும் பதிலளித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது. இந்த நேரலைப் பேட்டியில், அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதற்கான அறிகுறியை சினிமாவில் காட்டாதது ஏன் என்ற கேள்வியை விஜய் சேதுபதி, கமலிடம் எழுப்பினார். அதற்கு கமலும் பதிலளித்தார். அந்தப் பகுதி: விஜய் சேதுபதி: நீங்கள் அரசியலுக்கு வந்ததைப் பெரிதாக வரவேற்கிறேன் சார். இத்தனை ஆண்டுகள் சினிமாவை நேர்மையாக எங்களுக்குக் கொடுத்த மனுஷன் அரசியலுக்கு வரும்போது, இதே அளவுக்கு…

பிரபல அமெரிக்கா பாடகி மடோனாவுக்கு கொரோனா அறிகுறி

பிரபல பாடகி மடோனாவுக்கு கரோனா ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு வந்துள்ளதாக அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாடகியும், நடிகையுமான மடோனா (வயது 61) ஆன்டிபாடி பரிசோதனையில் தனக்கு பாசிடிவ் என முடிவு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு, கொரோனாவுக்கான சாத்தியம் இருப்பதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லலாம். ஆன்டிபாடி பரிசோதனை என்பது குறிப்பிட்ட நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த நபா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் அவரது ரத்தத்தில் உருவாகியிருக்கும். அதைக் கண்டறிவதே ஆன்டிபாடி பரிசோதனையாகும். பரிசோதனையின் முடிவை அறிந்துகொண்ட பிறகு, தாம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மடோனாவின் பதிவுகளில் ரசிகர்கள் அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகக் கருத்துகளைக் தெரிவித்து வருகின்றனர்.

நிசப்தம் படப்பிடிப்பின் கடைசி நாள்

நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சிவியின் ‘சாய் ரா' திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ‘சைலன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்'. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகிவரும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அனுஷ்கா, மாதவனின் ‘இரண்டு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தை விஷவ பிரசாத் மற்றும் கோனா வெங்கட் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மேலும், மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்துக்குக் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில்…

சென்னை சந்தையில் காய்கறி வாங்கிய 11 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை பெரியமேடு ஷ்ரிங்கர் தெருவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று கோயம்பேடு சந்தையில்…

மாணவர்களை அழைத்துவர லண்டனுக்கு விசேட விமானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, இன்றையதினம் (03) முதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 503 எனும் விசேட விமானம், இன்று (03) அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி புறப்பட்டுள்ளது. இவ்விமானத்தில் விமான சேவை பணியாளர்கள் மாத்திரம் பயணித்துள்ளனர். இவ்வாறு புறப்பட்டுள்ள விமானம், இன்று முற்பகல் 11.25 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைவதோடு, நாளை (04) அதிகாலை 12.45 மணிக்கு இவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது. இலங்கை மாணவர்கள் சுமார் 250 பேரை இவ்விமானம்…