விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள்

துப்பறிவாளன் 2' படம் தொடர்பாக விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் முழுமையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, கெளதமி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடிக்க ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், விஷால் - மிஷ்கின் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. இதனால் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இறுதியில், இந்தப் படத்தின் இயக்குநராக விஷாலே பொறுப்பேற்றார். அவருடைய இயக்கத்தில் விரைவில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனிடையே, படக்குழுவினர் மத்தியில் விசாரித்தபோது விஷாலுக்கு மிஷ்கின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில்தான் விஷால் மிகவும் கோபமானதாகவும் தெரிவித்தார்கள். தற்போது, அந்தக் கடிதத்தின் நகல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மிஷ்கின் கூறியுள்ள 15 நிபந்தனைகள் அப்படியே.. 1. சம்பளம் 5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி உட்பட 2.…

அடித்து சித்ரவதை செய்தார் காதலர் மீது சனாகான் மீண்டும் புகார்

நடிகை சனாகான் காதலர் மீது மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்த சனாகான், இந்தி திரையுலகிலும் அதிக படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவருக்கும், நடன இயக்குனர் மெல்வின் லூயிசுக்கும் காதல் மலர்ந்து சில மாதங்கள் ஜோடியாக சுற்றினார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். சனாகான் கூறும்போது, “நான் காதலித்த மெல்வின் ஏமாற்றுக்காரர். மோசடி பேர்வழி. நடிகைகள் உள்ளிட்ட சில பெண்களிடமும் அவருக்கு தகாத தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகி காதலை முறித்துக்கொண்டேன்” என்றார். சனாகான் தன்மீது தொடர்ந்து அவதூறு கூறி பிளாக்மெயில் செய்கிறார் என்று மெல்வின் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதில் அளித்து சனாகான் கூறியிருப்பதாவது:- “நான் பிளாக்மெயில் செய்யவில்லை. காதலை முறித்தபோது அவர் முன்னால் தைரியமாக…

காதல் திருமணம் செய்து கொள்வேன்நடிகை திரிஷா

காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை திரிஷா கூறினார். தென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களாக கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் திரிஷா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொள்ளாததால் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த நிலையில் ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- கேள்வி:- தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் தொந்தரவு கொடுப்பதாக சொல்கிறார்களே? பதில்:- அந்த பழக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இல்லை. வரச்சொன்ன நேரத்துக்கு வந்து படப்பிடிப்பு முடிவது வரை இருப்பது எனது பழக்கம். படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்கு வந்து விடுவேன். சமீபத்தில் எதிர்பாராமல் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிக்கு நேரம் கொடுத்ததால் சில சர்ச்சைகள் வந்தன. கேள்வி:- உங்கள் திருமணம் பற்றி சொல்லுங்கள். பதில்:- நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னேனே தவிர எப்போது செய்து கொள்வேன் என்று சொல்லவில்லை. திருமண…

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது. அப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், புது வருடம் பிறந்த பின் தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது. கடந்த ஜனவரி 1ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880க்கும் விற்பனை ஆனது. கடந்த ஜனவரி 3ந்தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம்…

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய இராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வடக்கு அயர்லாந்தில் 16 பேரும், வேல்ஸில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான் நடீன் டோரிஸிக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா?

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் 26 பேர் உயிரிழந்த நிலையில், 700 க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் 5 பேர் தாங்களாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் கொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். இதனிடையே டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதா என கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை ஜனாதிபதி டிரம்புக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய முதலாவது நபர் இனம் காணப்பட்டார்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான இலங்கையை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில் அவர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதனை உறுதி செய்வதற்காக MRI பரிசோதனை செய்ய உள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 52 வயதுடைய சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் ஒருவரே இவ்வாறு வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளார். குறித்த நபர் இத்தாலி நாட்டு குழு ஒன்றிற்கு சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு தேவையான வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த சுற்றுலா பயணிகள் பயணித்த இடம் மற்றும்…