பொதுத்தேர்தலில் மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்கவுள்ளேன்

இம்முறை பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை விட மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு எமது எதிர்தரப்பினர்களுக்கு இருந்த கால நேரம் எமக்கு இருக்கவில்லை. காரணம், எம்மை அனைத்து இடத்திற்கும் அனுப்பினர், எமக்கும் செல்ல வேண்டி ஏற்பட்டது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எங்கும் செல்வதில்லை. அப்படி செல்ல தயாராகவும் இல்லை.இந்நாட்டிற்கு புதிய ஆற்றல் மிகுந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம். என்றார்.

பொறுப்பு கூறுவதில் இலங்கை தோல்வி ஐ.நா. கருத்து..! முடிவில்லாத அவலம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாக மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பிலான தீர்மானம் குறித்து இதற்கு முன்னர் எட்டிய முடிவுகளுக்கு அப்பாற் சென்று புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஒன்று மக்களுக்காகவே செயற்பட வேண்டும் என்பதுடன், சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செயற்படுத்த வேண்டும் எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இலங்கை பெற்றுக் கொண்டவற்றை பாதுகாத்துக் கொள்ளுமாறும், முன்னேற்றிக்…

இந்தியன்-2 வெற்றிக்கு மட்டும் உலக நாயகனும் சங்கரும் பொறுப்பு..!

எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்காமல் கமல் நடிக்க வரமாட்டார்.. அவருக்கு ஒரு சிறிய பற்றாக்குறை இருந்தாலும் அனுமதிக்கமாட்டார்.. தோளில் கைபோட நாயகன் பட நடிகை அனுமதிக்காத காரணத்தால் அவர் காதில் அடித்து ஓடவைத்தவர் என்று முன்னர் செய்திகள் வந்தன. ஆகவே சரிந்து விழும் கிரேனை வைத்து படமெடுக்க கமல் அனுமதித்திருக்க முடியாது. ஏல்லா வெற்றிகளுக்கும் உலக நாயன் பொறுப்பு.. சங்கரின் அசத்தல் இயக்கம் என்கிறபோது அவருக்கு பெருமை.! வெற்றி எல்லாம் உங்கள் இருவருக்கும் கிரேன் விழுந்தது மட்டும் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமா பொறுப்பு.. என்னாங்கடா இது..? இதோ செய்தி.. -------- இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து கமல்ஹாசனுக்கு பட நிறுவனம் பதில் அளித்துள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து 3 பேர் பலியான விபத்து திரையுலகினரை உலுக்கியது. இதையடுத்து படப்பிடிப்புக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்து…

எந்த உதவிகள் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு ஈடாகாது

இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று…

இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வர முடியாது

எமது நியாயங்களை உலகுக்கு ஆணித்தரமாக முன்வைப்போம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து தற்போது விலகியதன் மூலம் எமது தரப்பு நியாயங்களை சர்வதேச சமூகத்திடம் ஆணித்தரமாக முன்வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டுவந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இணை அனுசரணையிலிருந்து ஒதுங்கியது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், நாட்டை மீட்ட படைவீரர்கள் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் கடந்த அரசு ஜெனீவா யோசனைக்கு…