அயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்

உத்திரபிரதேசத்தில் சுமார் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த முகம்மது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. அயோத்திவாசியான இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இச்சமூகப்பணியை செய்து வருகிறார். அயோத்திவாசிகளால் ‘ஷெரீப் சாச்சா’ என அன்புடன் அழைக்கப்படுபவர் முகம்மது ஷெரீப்(80). சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்து பிழைக்கும் இவர் அயோத்தி அமைந்துள்ள உ.பி.யின் அவத் பகுதி முழுவதிலும் அறிமுகமானவர். இதற்கு அவர் கடந்த 27 வருடங்களாக அடையாளம் தெரியாமலும், ஆதரவில்லாமலும் உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்வது காரணம். இதை ஷெரீப் தனது செலவில் செய்து வருவதன் பின்னணியில் அவரது குடும்ப வாழ்க்கையில் நடந்த சோகம் உள்ளது. கடந்த 1993 இல் அருகிலுள்ள சுல்தான்பூருக்கு ஒரு பணியாக செய்ன்ற ஷெரீப்பின் இளையமகன் முகம்மது ரெய்ஸ் வீடுதிரும்பவில்லை. காவல்துறையில் புகார் அளித்து பல மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை. பிறகு ரெய்ஸின்…

சிம்புவுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பெண் யார்? ரசிகர்கள் கேள்வி

சிம்புவுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பெண் சிம்புவை மணந்து கொள்ள இருக்கும் பெண்ணா? போன்ற கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள். இந்தநிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த சிம்பு, திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக…

ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன்?

தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இது அவருக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சத்தில் தயாராகிறது. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகளும் ரஜினியின் அறிமுக பாடல் காட்சியும் படமாக்கப்பட்டன. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதில் சித்தார்த்தும் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் ரஜினி படத்தில் இணைந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் அந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. போலியான டுவிட்டர் கணக்கில்தான் அந்த விவரம் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதை விடவில்லை.…

அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்..? தேவையா..?

அடுத்த மாதம் (பிப்ரவரி) 25 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. பிப்ரவரி 7-ந்தேதி சீறு, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. சீறு படத்தில் ஜீவாவும், எம்.ஜி.ஆர் மகன் படத்தில் சசிகுமாரும் கதாநாயகனாக நடித்துள்ளனர். 14-ந்தேதி வானம் கொட்டட்டும், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே, ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால், அதோ அந்த பறவைபோல ஆகிய படங்கள் வருகின்றன. வானம் கொட்டட்டும் படம் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி உள்ளது. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அதோ அந்த பறவைபோல அமலாபால் நடிப்பில் தயாராகி உள்ள திகில் படம். 21-ந்தேதி, பிரபுதேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல், தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகும் தக்கு முக்கு திக்கு தாளம், அருண் விஜய்யின் மாபியா ஆகிய படங்கள் வருகின்றன.…

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது..? அடிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவராக இருந்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு…

எனது மனைவி இந்து… நான் முஸ்லிம்… எனது குழந்தைகள் இந்தியர்கள்

எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்ற நடிகர் ஷாருக்கானின் பேச்சு வரவேற்பை பெற்றுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மனம்திறந்து பேசியுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அவரின் பேச்சு இணையப் பக்கங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் ஷாருக்கான் பேசும்போது கூறியதாவது:- நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன், என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவள், என் பிள்ளைகள் இந்தியர்கள். எங்களுக்கு மதம் கிடையாது. நாங்கள் வீட்டில் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளிடம் மதம் குறித்து பேசுவதில்லை. எனது குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோது மதம் பற்றி எழுதச் சொன்னார்கள். எனது மகள் ஒரு நாள் வந்து, நம்முடைய மதம் என்ன அப்பா என்று கேட்டார். நான் எனது மகளின் விண்ணப்பத்தில் இந்தியன் என்று எழுதினேன் என கூறினார்.…