“மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்

நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பிகில் படத்துக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாளவிகா மோகனன் நாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி, அர்ஜுன்தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையிலும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் முக்கிய காட்சிகளை எடுத்தனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா கவர்ச்சியான பேராசிரியை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அதிசயிக்கும் திறமை கொண்ட இயக்குநருடன் 2020 ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றுகிறேன். வரும் பிப்ரவரியுடன் எனக்கான படப்பிடிப்பு காட்சிகள்…

புதுமுகங்களுடன் ஜோடி சேர தயார் -காஜல் அகர்வால்

புதுமுகங்களுடன் ஜோடி சேர தயார் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:- ‘சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். ஒரு படத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் குறிப்பிட்ட படத்தில் நடித்தால் நமக்கு பெயர் கிடைக்குமா அல்லது கெட்டுப்போகுமா என்ற பயமெல்லாம் இருந்தது. இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால்…

புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் சம்பளம் 120 கோடி ரூபாய்

தனுசுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் தனு வெட்ஸ் மனு மற்றும் ஜீரோ புகழ் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். படத்தில் சாரா அலிகான் மற்றும் தனுஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டை பொருத்தவரை அக்ஷய்குமார் பெரும்பாலான படங்கள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் டிவி உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அவரது சம்பளமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் ஆனந்த் எல் ராய் அடுத்து இயக்கவுள்ள இந்தப் படத்தில், அக்ஷய்குமாருக்கு 120…

ஜனநாயக பின்னடைவுகள் நாடுகள் பட்டியலில் இந்தியா

ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் ஜனநாயக பின்னடைவுகள் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்று உள்ளது. ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்களைக் குறைந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. நாட்டில் மக்களின் உரிமைகள் பறிப்பது என்பது ஜனநாயக பின்னடைவுக்கு முதன்மைக் காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் மக்கள் உரிமைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது ஆகும் . இதில் இந்தியாவின் மதிப்பெண் 2018 இல் 7.23 லிருந்து 2019 இல் 6.90 ஆகக் குறைந்து உள்ளது. "ஜனநாயக பின்னடைவுகள்" நாடுகளில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா பிராந்தியத்தில், திமோர்-லெஸ்டே, மலேசியா மற்றும் தைவான் போன்ற நாடுகளை விட இந்தியா குறைந்து ஜனநாயக பின்னடைவுகள் நாடுகள் பட்டியலில் எட்டாவது…

சிவநேசதுரை சந்திரகாந்தனின் வழக்கு பெப். 25வரை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (22) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை பெப்ரவரி 25ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அப்துல்லா முன்னிலையில் இன்று(22) காலை வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்…

யாழில் மர்மமாக உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று (22) காலை மீட்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம் என அங்கிருந்தவா்கள் கூறியுள்ளனா். எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.